March 25, 2023

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தாய்லாந்திலிருந்து நேற்று இரவு நாடு திரும்பினார்!

லங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்று மக்கள் போராட்டம் வலுத்ததையடுத்து, இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, கடந்த ஜூலை 13-ஆம் தேதி நாட்டிலிருந்து வெளியேறி மாலத்தீவு சென்றார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய, பின்னர் தாய்லாந்து சென்று அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

கோத்தபய நாடு திரும்ப விரும்புவதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவரது கட்சியினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கோத்தபய நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க செய்தார் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கோத்தபய ராஜபட்ச தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக நேற்று இரவு கொழும்பு வந்தடைந்துள்ளார்.