கடந்த 2022 – 2023 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் இந்தியர்கள் வெளிநாட்டு பயணங்களில் ரூ.80,000 கோடி வரை செலவிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது எந்த நிதியாண்டில் இல்லாத அளவுக்கு மிக அதிகமான செலவினம் எனவும் ஆர்.பி.ஐ. கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின் படி 2022-ம் ஆண்டின் டிசம்பரில் மட்டும் இந்தியர்கள் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.9,000 கோடியை செலவிட்டுள்ளனர். 2022 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை விடுமுறை நாட்களில் மட்டும் வெளிநாட்டு பயணங்களுக்கு இந்தியர்கள் ரூ.80,000 கோடி செலவு செய்துள்ளனர். கல்வி, உறவினர்களை பராமரித்தல், பரிசுகள் மற்றும் முதலீடுகளுக்காக செலவிடப்பட்ட அந்நிய செலாவிணி கணக்கின்படி நடப்பு நிதியாண்டில் இந்தியர்கள் ரூ.1.50 கோடி அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டின் அளவான ரூ.1.60 கோடிக்கு நெருக்கமான தொகையாகும்.
2018-ம் நிதியாண்டில் மொத்த மாதாந்திர சராசரியை விட கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்திய மக்கள் வெளிநாடுகளில் 2 மடங்கு அதிகம் செலவு செய்வதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2021-க்கு முன்பு வரை தொற்றுநோய் காரணமாக வெளிநாட்டு பயணங்கள் 25% குறைந்திருந்தது. ஆனால், கொரோனா தளர்வுகளை அடுத்து 2022 – 2023-ல் சர்வதேச செலவினங்கள் 51% அதிகரித்துள்ளதாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணங்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடுகளில் தங்கி இருக்கும் உறவினர்களை பராமரிக்க இந்தியர்கள் செலவிடும் தொகை குறைந்துள்ளது. 2018-ல் 26% இருந்த பராமரிப்பு செலவுகள் நடப்பு நிதியாண்டில் 15% குறைந்துள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான செலவினங்களின் அதிகரிப்பை நகர்வு தேவையின் அடையாளமாக பொருளாதார வல்லுநர்கள் கருதினாலும் அதிகரித்து வரும் வெளிநாட்டு செலவுகள் நடப்பு கணக்கு பற்றாக்குறையை மோசமாக்கும் என்று தெரிவிக்கின்றனர்
தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது.…
ஆதார் எண் இந்தியரின் ஒரு அடையாள எண்ணாக மாறிவிட்ட நிலையில், அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்ட…
ஒரு நாட்டின் வரி வசூலை உடனடியாக 75% அதிகப்படுத்தவேண்டும். கண்டிஷன்கள்: அதிரடி ரெய்டுகள் கூடாது. வரிகளை அதிகப்படுத்தக்கூடாது. மக்கள் கழுத்தில்…
இந்தியாவில் விற்பனைத் துறையின் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் 13% மட்டுமே உள்ளனர் என்றும், இந்தியாவில் விற்பனைப் பணியாளர்களில்/ விற்பனைத்துறை உழைப்புச்…
ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. 'மிர்ச்சி' சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர்…
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக…
This website uses cookies.