உணவை கையால் பரிமாறத் தடை! – இலங்கை சுகாதாரத் துறை அதிரடி!

நம் நாட்டில் அதாவது இந்தியாவில் உணவை கைகளால் சாப்பிடுவதுதான் பாரம்பரிய வழக்கம். நம் தேசத்தில் மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகள் ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு மற்றும் ஆசியா போன்ற நாடுகளிலும் உணவை கைகளால்தான் சாப்பிடுகிறார்கள் அவர்கள் ஸ்பூன்,போர்க் மற்றும் கத்தி பயன்படுத்துவதில்லை. இன்றைய காலத்தில் நாகரீகம் என்னும் பெயரில் அனைவரும் ஸ்பூன் மற்றும் போர்க் பயன்பாடு அதிகமாக இருக்கு அதனால் நமது பழக்க வழக்கங்களை மறந்து வருகின்றனர். அதே சமயம் பல ஓட்டல் மற்றும் வீடுகளில் உணவை கையால் பறிமாறுகிறார்கள்.. இது தவறு.. இதனால் தேவையில்லாத தொற்ரு நோய்கள் வரச் சான்ஸ் உண்டு. இதைக் கவனத்தில் கொண்டு இலங்கையில் உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகிக்க நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உண்ணுதல் என்பது உணர்வு மற்றும் பேரானந்தத்தை கொடுக்கும் ஒன்று,ஆயுர்வேத படி கையில் இருக்கும் ஒவ்வொரு விரலுக்கும் ஒரு வரலாறு உண்டு.அதில் பெருவிரல் ஆகாயம்,ஆள்காட்டி விரல் காற்று,நடுவிரல் நெருப்பு,மோதிர விரல் தண்ணீர்,சுண்டுவிரல் நிலம் என நாம் முன்னோர்கள் சொல்லிவைத்தது.இவை ஐந்தும் உங்களை சாப்பிட தூண்டுகிறது.

அதே சமயம் இலங்கையில் உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விநியோகிக்க மற்றும் பரிமாறும் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக நாளை முதல் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

நாளை முதலாம் தேதி முதல் ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுகளை கையுரை மற்றும் அதற்கான உபகரணங்கள் மூலமே தொட முடியும்.

இது தொடர்பாக அறிவித்துள்ள சுகாதார அமைச்சகத்தின் உணவு கட்டுப்பாட்டு பிரிவு இதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இதன்போது சுத்தமான கையுறை மற்றும் கரண்டி உள்ளிட்ட உபகரணங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.