நெகிழிக் குப்பைகளைக் கொடுத்தால் புவ்வா – டெல்லியில் தொடக்கம்!

நெகிழிக் குப்பைகளைக் கொடுத்தால் புவ்வா – டெல்லியில் தொடக்கம்!

நம் நாட்டிலேயே அதிகம் மாசுபாடுள்ள நகரமாக அறிவிக்கப்பட்டது டெல்லிதான். அங்குள்ள காசிப்பூர் பகுதியில், மிகப்பெரும் குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது. டெல்லி முழுவதிலும் உள்ள அனைத்துக் குப்பைகளும் சேகரிக்கப்பட்டு, காசிப்பூரில் கொட்டப் படுவது வழக்கம். ஒரு நாளுக்கு சுமார் 100 டன் குப்பைகளாவது அங்கு கொட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும் கூகுளில், குப்பைமலை (Mountain Of Garbage) எனத் தேடினால், காசிப்பூர் பகுதி வந்துவிட்ட அளவுக்கு மாறி விட்ட டெல்லியில் குப்பைகளைக் கொடுத்து உணவு அருத்தும் வகையிலான ‘குப்பை உணவ க’த்தை (கார்பேஜ் கஃபே) தெற்கு டெல்லி மாநகராட்சி அண்மையில் தொடங்கியுள்ளது.

இந்தியத் தலைநகரில் முதலாவது ‘குப்பை உணவக’த்தை (கார்பேஜ் கஃபே) நஜாஃப்கா் பகுதியில் உள்ள வா்த்தமான் பெரும் வணிக வளாகத்தில் தொடங்கியுள்ளது. இங்கு, நெகிழிக் (plastic) குப்பை களைக் கொடுத்து மக்கள் உணவு உட்கொள்ளலாம். 250 கிராம் நெகிழிக் (plastic) குப்பைகளைக் கொடுத்து காலை உணவும், இரவு உணவும் பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் 1 கிலோ நெகிழிக் (plastic) குப்பைகளைக் கொடுத்து மதிய உணவும் சாப்பிடலாம்

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. வீடுகள், தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகளைக் கொடுத்து மக்கள் இங்கு உணவைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த உணவகத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மேலும் பல இடங்களில் இதுபோன்ற உணவகங்களைத் தொடங்கவுள்ளதாக எஸ்டிஎம்சி அதிகாரிகள்தெரிவித்தார் .

முன்னதாக இந்தியாவின் முதலாவது குப்பை உணவகம் 2019, அக்டோபரில் சத்தீஸ்கா் மாநிலத்தில் அம்பிகாபுா் மாநகராட்சியால் தொடக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநகராட்சிகளும் இந்த உணவகங்களைத் தொடங்கப்பட்டுள்ளது

Related Posts

error: Content is protected !!