April 13, 2021

நாடு முழுவதும் ஜனவரி 13 முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகம்!

நீண்ட சோதனைகளுக்கு முன் நம் நாடு முழுவதும் ஜனவரி 13ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‛ கோவாக்சின், கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை அவசர கால பயன் பாட்டிற்கு பயன்படுத்த, இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதால் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்க உள்ளன.கொரோனா தடுப்பூசி செலுத்த அனைத்து மாநிலங்களும் முழு அளவில் தயாராக உள்ளன.அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராக உள்ளோம். சென்னை, கர்னல், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.இது தவிர நாடு முழுவதும் 37 தடுப்பூசி விற்பனை கூடங்கள் உள்ளன.

ஜனவரி 13 முதல் முதற்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவத் துறையினருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்,’ என்றார். இதனிடையே மக்களின் நம்பிக்கையை வெல்ல ரஷியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தலைவர்கள் முதலில் தடுப்பூசி போட்டதைடுக் கொண்டதை சுட்டி காட்டி, இந்தியாவிலும் முதல் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் எடுத்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்து உள்ளது.