இந்திய பொருளாதாரம் ரொம்ப ஸ்ட்ராங்க் :நிர்மலா சீத்தாராமன் சென்னையில் பேட்டி

இந்திய பொருளாதாரம் ரொம்ப ஸ்ட்ராங்க் :நிர்மலா சீத்தாராமன் சென்னையில் பேட்டி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேட்டி அளித்த அளித்த போது தான் தாக்கல் செய்த நிதியறிக்கையில், மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடா னது குறைக்கப்படவில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத்தொகையைப் பொறுத்தவரை 2 தவணை நிலுவையில் உள்ளது. விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும்என்று கூறினார்.

சென்னையில் நடைபெற்ற ’மக்களுக்காக பட்ஜெட்’ என்ற  நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “`இந்தியாவின் பொருளா தாரம் வலுவான நிலையில் உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு மற்றும் அந்நிய நேரடி முதலீடு கள் அதிகபட்ச நிலையில் உள்ளது. சிறு குறு தொழில்துறையினருக்கு எந்தக் காரணமும் இன்றி வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் இதுகுறித்து புகார் தெரிவிக்க சிறப்பு மையம் விரைவில் அமைக்கப்படும். மெயில் மூலம் புகார்கள் அனுப்ப வழிவகை செய்யப்படும். புகார் தெரிவிக்கும் போது அதன் நகலை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு அனுப்ப வேண்டும். பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதிகள் குறைக்கப்படவில்லை. நிலுவைத் தொகைகள் அந்தந்த மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளது. ஜிஎஸ் டி நிலுவைத்தொகையைப் பொறுத்தவரை 2 தவணை நிலுவையில் உள்ளது. விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும். மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுத்துவதுபோல் இந்த பட்ஜெட் உள்ள தாகக் கூறுவது முற்றிலும் தவறானது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இதுகுறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.

விவசாயிகளுக்கான நிதி உதவிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான சோலார் பம்ப் திட்டத்துக்கு மாநிலங்களுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அரசு பின்னர் தெரிவிக்கும். பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எல்.ஐ.சி-யின் பங்குகளைத் தனியாருக்கு விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனை சதவிகித பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை: என்றார்.

மேலும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், பொதுமக்களின் பங்கும் இருந்திட வேண்டும் என்பதற்காகத் தான், இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் மத்திய அரசாங்கத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டமிட்டதாகவும், தனியார் வசம் ஒப்படைக்கப் படுகின்ற பங்குகளின் சதவிகிதம் பற்றி, சதவீத பங்குகள் பற்றியும் இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை என்றும் , இந்தியாவின் மாநில அரசாங்கங்கள் ஒத்துழைப்புத்தந்தால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ், பெட்ரோல், டீசல் போன்றவற்றை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

error: Content is protected !!