July 27, 2021

நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கிய 20 லட்சம் கோடி சுய சார்பு பாரதம் திட்டம்!

மக்களை முடக்கிப் போட்டுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி அளவிற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த சிறப்பு திட்டங்கள் நிதி அமைச்சர் அறிவிப்பார் என பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி இன்று செய்தி யாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் ஆனால் நிதிஅமைச்சரின் இன்றைய அறிவிப்புகளில் ஒன்றும் இல்லை என பல்வேறு எதிர்கட்சிகள் குறை கூறி உள்ளன. அதே நேரம் உ.பி மற்றும். டெல்லி முதல்வர்கள்ச அமைச்சரின் அறிவிப்புகளை வரவேற்றுள்ளனர். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் இது மிகப்பெரிய பூஜ்ஜியம். 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஒன்றும் இல்லை.மத்திய அரசு அறியாமையில் இருக்கிறது சிறு, குறு தொழில் துறையினருக்கு பெரிய அறிவிப்ப வரும் எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சிய. அன்றாடம் கடுமையாக உழைப்பவர்களுக்கு மத்திய அரசின் அறிவிப்பு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று மே 12 அன்று, பிரதமர் மோடி 20 மில்லியன் கோடி சுயசார்பு இந்தியா (Atmanirbhar Bharat Package) திட்டத்திற்கான மிகப்பெரிய நிதித்தொகுப்பை அறிவித்தார். இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த நிதி தொகுப்பு எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்த தகவல்களை அளித்தார்.

இதோ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்புகள்:

”தென்னிந்தியாவில் உள்ளவர்கள் Aatmanirbhar Bharat என்றால் என்ன என்று கேட்கிறார்கள். அவர்களில் தமிழ் மொழியில் பேசுபவர்களுக்காக சொல்கிறேன்.

‘சுயசார்பு பாரதம்’”.

இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கிலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் வலியுறுத்தியுள்ளார் –

பொருளாதாரத் திட்டத்தின் 5 முக்கிய தூண்கள் – பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழிநுட்பம், மக்கள் சக்தி, தேவைகள்.

உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச விற்பனை பொருட்களாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். பல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த சிறப்பு பொருளாதார தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை எட்டியுள்ளது.

ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ரூ. 50 லட்சம் காப்பீட்டுத் தொகையை பன்முகத்தன்மை கொண்ட யோஜனா வழங்கியுள்ளது.

“நிதிக்குள், நிதி” திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ. 50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்.

நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 20,000 கோடி.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு எந்தவித உத்தரவாதமுமின்றி 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்.

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ. 30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்.

சிறு குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் இருந்து கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தும் அடுத்த 45 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்பட்டுவிடும்.

கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை.

RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ. 1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.

ரூ. 10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்.

சிறு, குறு நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்த ரூ. 10,000 கோடி கடன் வழங்கப்படும்.

வராக்கடன் பட்டியலில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 50,000 கோடி நிதியுதவி.

உதவி தேவைப்படும் சிறு, குறு நிறுவனங்கள், வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கும் புதிய கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான PF தொகையை மத்திய அரசு செலுத்தும்.

ஏற்கனவே 3 மாத சலுகையை அரசு வழங்கியிருந்தது. இதன் மூலம் 72 லட்சம் தொழிலாளர்கள் மேலும் பயன்பெறுவார்கள்.

வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் வரை நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்ய மேலும் 3 மாத கால அவகாசம். நவம்பர் 30 வரை வருமான வரி தா­­க்கல் செய்யலாம்.

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு ரூ.18,000 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு 25% குறைப்பு.

இதன் மூலம் மக்கள் கைகளில் சுமார் ரூ.50000 கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்.

ஊதியம் வழங்கும் போது பிடிக்கும் வருமான வரி தொகையில் 25% குறைப்பு.

ஊதியத்தில் பி.எஃப் நிதிக்கு செலுத்த வேண்டிய 12% தொகை 10% ஆக குறைப்பு.

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அரசு செலுத்தும்.

வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்.

மின் உற்பத்தி நிறுவனங்களின் நிதிநெருக்கடியை தீர்க்க ரூ.90,000 கோடியில் திட்டம்.

வாடிக்கையாளர்களுக்கு இதன் பயனை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும்.

69 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ. 200 கோடிக்கு குறைவான டெண்டர்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படாது.

உற்பத்தி, சேவை துறையில் உள்ள நிறுவனங்கள் இடையேயான பாகுபாடு களையப்படும்.

மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது.

எரிசக்தித் துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது.

ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் மூலம் ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்.