April 17, 2021

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு – பாக். அமைச்சர் ஒப்புதல்

நம் ஒட்டு மொத்த இந்திய மக்களை அதிர்ச்சி அடைய வைத்த புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் புல்வாமா பகுதியில் பயங்கிரவாத தாக்குதல் நடந்தது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியது.இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் நாடாளு  மன்ற கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் செளத்ரி பேசியபோது, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், புல்வாமா தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதில், பாகிஸ்தான் அரசிற்கு பங்கு இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து பேசிய ஃபவாத் செளத்ரி, “புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஏற்றுக்கொள்கிறது, இம்ரான் கான் அரசாங்கத்தின் கீழ் இது மிகப்பெரிய சாதனை என்று பாராட்டுகிறது” என்று அவர் தெரிவித்தார்.