Exclusive

ஃபில்டர் கோல்ட் -விமர்சனம் !

மிழ் சினிமா கேலியும் கிண்டலும் மட்டுமே செய்த மூன்றாம் பாலினத்தவரான அரவாணிகள் வாழ்வையும், அவர்களின் வலிகளையும், ரத்தமும் சதையுமுமாக சொல்ல முயன்றிருக்கிறது இந்த ஃபில்டர் கோல்ட். அதற்காகவே இப்படத்தை பாராட்டலாம். நம் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், தனி மனித உரிமைகளுக்கே இன்னும் சரியான தீர்வுகளே கிடைக்கவில்லை. இதில் அரவாணிகள் பிரச்சனைகள் எல்லாம் சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிற உலகில், அவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி பதிவு செய்துள்ளது இந்த சினிமா.

சுத்த தங்கம் என்பதை இங்கிலீஷி சொல்லும் இப்படக் கதை என்னவென்றால் திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் விஜி கொலைக்கு அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அவர்களுக்கு முன்னால் நின்று தண்டனை கொடுக்கிறார். தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு கொலை செய்வதை விஜி தொழிலாக செய்து வருகிறார். இவர்களின் வாழ்வியலை நியாயப்படுத்த முஅன்று இருக்கிரார்கள்

அரவாணிகள் பற்றி சமூக வலைதளங்களில், அரசியல் மேடைகளில் பொது வெளிகளில் மாரியாதையும் மதிப்பும் பாராட்டுகள் கிடைத்தாலும், நிஜத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். அரவாணிகள் தெருத்தெருவாக பிச்சை எடுப்பதும் பாலியல் இச்சைகளுக்கு பலியாகி பணம் சம்பாதிப்பதுமாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வே இருன்மையும் வறுமையும் வன்முறை சார்ந்ததுமாகத்தான் இருக்கிறது. அது அப்படியே திரையில் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அதனோடு வன்முறையும் கொஞ்சம் அதிகமாகவே காட்டப்பட்டிருக்கிறது.

அரவாணிகளாக நிஜ அரவாணிகள் பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய பாஸ்கர் விஜியாக கலக்கியிருக்கிறார். அரவாணிகள் வாழ்வை நெருங்கி சொல்லும் படத்தில் ரௌடிசமும், கூலிப்படை கொலைகளும் அவர்கள் செய்வதாக வருவது நெருடல், அந்த காட்சிகள் அவசியமா ?

அரவாணிகள் மொழியில் பாலியல் வார்த்தைகளும் கெட்ட வார்த்தைகளும் சகஜம், அதை திரையில் குறைக்க முயன்றாலும் படம் முழுக்க வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதோடு ரத்தமும் வன்முறையும் படத்தை குழந்தைகள் பெண்கள் பார்க்க முடியாத அடல்ட் சினிமாவாக மாற்றி விடுகிறது. திரைக்கதையிலும் வசனங்களிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அரவாணிகள் வாழ்வை சொல்லும் சினிமாவில் வன்முறை நியாயம் என்பது போல் சொல்வது தகுமா ? இத்தனை ரத்தமும் தேவை தானா?

பல நடிகர்கள் புதுமுகங்கள் என்பதால் நடிப்பில் அமேச்சூர் தனம் தெரிவது சறுக்கல். இசை படம் முழுக்க இரைந்து கொண்டே இருக்கிறது. ஒளிப்பதிவு தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறது. சின்ன பட்ஜெட் படம் என்பது படத்தில் வெளிப்படையாக தெரிகிறது.

ஃபில்டர் கோல்ட் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பக்கத்தை, காட்டியிருக்கிறது.

aanthai

Recent Posts

தூதரகங்களுக்கு வந்த விலங்குகளின் கண்கள் பார்சல் – உக்ரைன் அதிர்ச்சி!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா…

1 hour ago

டிஎஸ்பி.- விமர்சனம்

ஐந்து வருடங்களுக்கு முன்னால் -அதாவது 2017இல் நல்ல ஸ்கிரிப்டுடன் வந்த விக்ரம் வேதாவுக்கு பிறகு ஏனோதானொவென்று திரையில் தோன்றும் போக்கு…

4 hours ago

“வரலாறு முக்கியம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்புத் துளிகள்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு…

7 hours ago

பிராமண உயிர் அற்பமானதா என்ன ?!

முந்தாநாள் தில்லியின் ஜேஎன்யூ பல்கலைக் கழக வளாகத்தில் சில சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன. 'பிராமணர்களே இந்தியாவை விட்டு…

8 hours ago

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி…

12 hours ago

10 மாதங்களாக தொடரும் எரி பொருள் கொள்ளை – கார்கே குற்றச்சாட்டு!

நம் நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.…

1 day ago

This website uses cookies.