ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டி :கோலாகலமாக தொடங்கிடுச்சு!

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டி :கோலாகலமாக தொடங்கிடுச்சு!

22வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் தொடங்கியது. ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையை கத்தார் பெறுகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிஃபா உலக கோப்பையில் 32 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கத்தாரில் 8 மைதானங்களில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கின்றன அதற்கு முன்பாக கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள அல் பைட் ஸ்டேடியத்தில் கோலாகல தொடக்க விழா நடந்தது. நடன நிகழ்ச்சிகள், பிரபல பாப் பாடகர் பிடிஎஸ் இசைக்குழுவின் இசைக்கச்சேரி ஆகியவை நடந்தன. கத்தார் நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடந்தன. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஃபிஃபா உலக கோப்பை திருவிழா கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் இந்த தொடரை நடத்தும் கத்தாரும் ஈகுவேடாரும் மோதுகின்றன.

முன்னதாக 2018ம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையுடன் இணைக்கப்பட்ட முந்தைய வணிகம் மூலமாக ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது. அது போல் இப்போது உலகக் கோப்பையை நடத்தும் நாட்டுடனான வணிக ஒப்பந்தங்களால் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது என்றும், கத்தார் எனர்ஜி நிறுவனம் இதில் ஒரு முக்கிய ஸ்பான்சராக உள்ளது. கத்தார் வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனமான Ooredoo ஆகிய நிறுவனங்கள் முக்கிய ஸ்பான்சராக உள்ளது. மேலும் 200 உறுப்பினர்களின் மூலமாகவும் வருவாய் கிடைத்துள்ளதாகவும் பிபா தெரிவித்துள்ளது.

இதுமட்டும் இல்லாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒப்பந்தம் மூலமாக பெரும் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 2021ம் ஆண்டில், பிபா தனது பிராண்ட் வணிகப் பொருட்கள், சில்லறை விற்பனை, கேமிங்கிற்கான உரிமம் ஆகியவற்றின் மூலமாக 180 மில்லியன் டாலர் அளவுக்கு சம்பாதித்துள்ளது.

மேலும் கால்பந்து உலக கோப்பைக்காக மூன்று மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 100 டாலர் முதல் 1,100 டாலர் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பிபாவின் பெயரை பயன்படுத்துவதற்கு ஆண்டுதோறும் 150 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது.

error: Content is protected !!