சின்னத்திரை & சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க அனுமதி தாங்க.. ப்ளீஸ்!

கொரோனாவின் உக்கிரத் தாண்டவத்தால் எல்லா தொழில்களையும் போல் சினிமா இண்டஸ்ட்ரியும் முழுக்க முடங்கி கிடக்கிறது. நாடெங்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமாவில் தினக்கூலி பணியாளர்கள் பலர் வேலையை இழந்து வறுமையால் வாடுகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தாராளமாக நிதி அளித்து உதவினர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் 1000 கோடியும், ஹிந்தி சினிமாவில் 5 ஆயிரம் கோடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. தெலுங்கு சினிமாவில் 2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளார் டகுபதி சுரேஷ் கூறியுள்ளார்.

இதனிடையே மூன்றாம் கட்டமாக நாளை முதல் தொடரவுள்ள ஊரடங்கு உத்தரவுகளில் சில தொழிற் துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி தமிழ்த் திரைப்படத் துறைக்கும், தமிழ்த் தொலைக்காட்சி துறைக்கும் விலக்களித்து திரைப்பட படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள், சின்னத்திரை தொடர் படப்பிடிப்புகள் ஆகியவற்றை நடத்திக் கொள்ள அனுமதி தருமாறு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்காக அந்த அமைப்பு இன்று தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதம் இதோ :