April 17, 2021

8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்!- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் சங்க தலைவர்களுடன் மத்திய அரசு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை.

இந்நிலையில், இன்று விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாளை பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு போராட்டமும், 7 ஆம் தேதி விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டமும், 8 -ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடந்த முடிவு செய்துள்ளனர்.

நாளை பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்ன எதிர்ப்பு வந்தாலும் மோடி உருவ பொம்மை எரிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், 7-ஆம் தேதி மத்திய அரசு விவசாய சங்க விவசாயிகளுக்கு ஏதேனும் விருதுகள் வழங்கியிருந்தால் அந்த விருதை திருப்பி அளிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.