ஃபானி புயலால் உருக்குலையும் ஒடிசா! – வீடியோ

ஆரம்பத்தில் தமிழகத்தைத் தாக்கும் நோக்கில் உருவான ஃபானி புயல் திசை மாறி ஒடிசா பக்கம் திரும்ம்பி இதுவரை அங்கி 3 பேர் பலியாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. ஃபானி என பெயரிடப் பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி, ஃபானி புயல் தற்போது ஒடிசா அருகே கரையை கடந்துள்ளது. ஒடிசா மாநிலம் கோபால்புர் மற்றும் சந்த்பாலி ஆகிய பகுதிகளுக்கு இடையே, காலை 11 மணிக்கு முழுமையாக இந்த புயல் கரையை கடந்தது. கரையை கடந்த போது இந்த 245கிமீ வேகத்தில் இந்த புயல் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக இதுவரை பலநூறு மரங்கள் விழுந்து இருக்கிறது.

நம்மூரில் கஜா புயலின் போது டெல்டா பகுதியில் மரங்கள் விழுந்தது போலவே தற்போது மரங்கள் அதிக அளவில் விழுந்துள்ளது. இதனால் ஒடிசா முழுக்க மின்சாரம் தடைபட்டு உள்ளது. ஒடிசா வில் இதனால் மீட்பு பணிகள் தற்போது தடைபட்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறார்கள் என்றும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதே போல் பூரிக்கு அருகே இருக்கும் கடலோர பகுதிகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு மீட்பு பணிக்காக்க தேசிய மீட்பு படையினர் களமிறங்கி இருக்கிறார்கள். பல ஹெலிகாப்டர்கள் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். முதற்கட்டமாக பலருக்கு உணவு, மருந்துகள் மற்றும் உடைகள் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புயலில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். தற்போது வரை 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

புரி மாவட்டம் சக்திகோபால் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் ஒரு இளைஞர் உயிர் இழந்தார். நயாக்ரா மாவட்டத்தில் குடிநீர் எடுக்கச் சென்ற பெண் மீது கட்டடம் இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த 65 வயது மூதாட்டி, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் செத்த விவரங்கள் குறித்த தகவல் கிடைக்கப் பெறவில்லை.

ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபானி புயல், தற்போது அதி தீவிரப் புயலாக இருந்து தீவிரப் புயலாக வலு குறைந்த நிலையில் மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்று கொல்கத்தா உட்பட மேற்கு வங்க மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.