குறைந்து வரும் ‘குடும்ப செக்ஸ்’ ஆசையும், அதிகரித்து வரும் ‘கள்ளக் காதல்’கலாச்சாரமும்!

நம்மூரில் கொச்சையாக ‘கள்ளக் காதல்’ என்று குறிப்பிடப்படும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் சகஜமாகி கொண்டுதான் வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

sex nov 24

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன….?

*தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின் மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலா மையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோ கூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

* திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக் கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம்.

* திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப் போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுக ளும், கற்பனை களும் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்ப னைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங் கள் எதிர் பார்ப்பிற்கு எதிராக அமையும் போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற் கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார் கள்.

* வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற் பட்ட உறவு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழிய ர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்குக் காரணம்.

தவிர கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின் றன. அது போகப்போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.

* தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இரு ப்பதாகவும் உணரும் பெண்கள், கணவ னைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமா கவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்

இதனிடையே ஒரே ஆணுடன் நீண்டகாலமாக, வாழும் பெண்களுக்கு செக்ஸ் ஆசை படிப்படியாகக் குறையும் என்று, தெரிய வந்துள்ளது.

ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு ஒன்று நடத்திய ஆய்விலேயே இவ்வாறு தெரியவந்துள்ளது. இதுபற்றி கடந்த 7 ஆண்டுகளாக, ஃபின்லாந்தில் வசிக்கும் 2000க்கும் அதிகமான மாணவிகள், இளம் பெண்கள், திருமணம் ஆனவர்கள் என பலதரப்பு பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்முடிவில், பள்ளி வயதில் தொடங்கி சக ஆணுடன் காதல் கொள்ளும் பெண்கள், அதே உறவில் நீண்ட காலம் நீடித்தால் அவர்களின் செக்ஸ் ஆசை குறைய தொடங்குவதாக, தெரியவந்துள்ளது.

இதேபோன்று, இளம் பருவத்திலும் இந்நிலையே பெண்களுக்குக் காணப்படுகிறது. திருமணம் முடிந்த பிறகும்கூட இத்தகைய பிரச்னைகள் பெண்களுக்கு எழுவது வழக்கமாக உள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே ஆணுடன் செக்ஸ் பகிர்ந்து கொள்ளும் பெண்களே இவ்வாறு பாதிக்கப்படுவதாக, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் கால அவகாசம் கிடைத்தாலும் அதற்கான திருப்தி கிடைக்காதது, ஒரே விதமான செக்ஸ் பழக்க முறைகள் போன்றவையே பெண்களின் ஆசையை குறைத்துவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மிக இளம் வயதிலேயே செக்ஸ் உறவுக்கு ஆட்படும் பெண்களுக்கே, இத்தகைய பிரச்னை அதிகளவில் ஏற்படுகிறது. அதேசமயம், பருவ முதிர்ச்சி பெற்ற பின், ஏற்படும் செக்ஸ் உறவால், அவர்களுக்கு திருப்தி கிடைக்கச் செய்வதாகவும், அந்த ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.