March 22, 2023

Face app செயலியை பயன்படுத்துவோரே.. உங்களுக்கு Deep Nude என்ற சொல்லாடல் தெரியுமா?

2004 ஆம் ஆண்டிலிருந்து Yahoo Chatroom பழக்கம். Yahoo chatroom ல் Crossdressers என்று ஒரு பிரிவே இருக்கும். அதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசித்து பெருமைகொள்வார்கள். சிலருக்கு அது போதையாகவே மாறியது. பின்னாளில் சிலர் வீட்டில் அவர்களது ஆசைகளைப் புரிந்துகொள்ளாமல் தவறாக எண்ணி திட்டியதால் சிலர் மனம் உடைந்து தற்கொலை செய்தனர். ஆண்பிள்ளைக்கு பொட்டு, பூ வைத்து கவுன் உடைகள் மாட்டிவிட்டு சிலரது வீட்டில் நிழற்படங்கள் இருப்பது பலரின் நினைவுக்கு வந்து போகலாம். இதெல்லாம் என் அனுபவ சுருக்கம்.

இந்த அனுபவ சுருக்கம் எதற்கு என்றால் இப்பொழுது எழுதப் போகும் பதிவை புரிந்து கொள்வதற்கே! தான் ஒரு பெண்ணாக இருந்தால் எப்படி இருப்போம். அழகும், கவர்ச்சியும் சேர்ந்தால் நாம் எப்படி இருப்போம் என்று ரசிப்பது என்பது ஒருவகையான Crossdressers மனநிலை தான். இதில் தவறேதும் இல்லை.

ஆனால் face app போன்ற செயற்கை அறிவாற்றல் கொண்ட செயலிகளைப் பயன்படுத்தும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். Face app செயலியை பயன்படுத்துவோருக்கெல்லாம் Deep Nude என்ற சொல்லாடலையோ அல்லது செயற்கை அறிவாற்றலால் உருவாக்கப்படும் நிர்வாணப் படங்கள் பற்றியோ தெரிந்திருக்கவோ, கேள்விப்பட்டிருக்கவோ வாய்ப்பில்லை.

எக்காலத்திலும் ஆபாசப்படங்களுக்கு என்று ஒரு தனி மார்க்கெட் உண்டு. இப்போது இந்த face app போன்ற செயலிகளில் நீங்கள் உருமாற்றம் செய்ய பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு படமும்  இந்த தொழில்நுட்பத்திற்கு ஓர் புதிய உள்ளீடு. பல வகையான உள்ளீடுகளையும், சமூக வலைத்தளங்களில் எவ்வளவு நபர்கள் எப்படியெல்லாம் இரசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து #Deepnude வணிகம் இயங்கும். பின்னாளில் இது மாபெரும் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூட வாய்ப்புண்டு.

அதனால், ஒவ்வொரு செயலியையும் பயன்படுத்தும் போது அதன் நோக்கமும், செயலாற்றும் விதங்களையும் அறிந்து பயன்படுத்துங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டும் பயன்படுத்தாதீர்கள்.

இது ஓர் விழிப்புணர்வு பதிவு

முரளிகிருஷ்ணன் சின்னதுரை