ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியில் மந்த நிலை!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியில் மந்த நிலை!

செல் போன் வைத்திருப்போரில் பெரும்பாலோனோர் வைத்திருப்பது ஃபேஸ்புக் அக்கவுண்ட். இதில் கிட்டத்தட்ட 30 மில்லியன் நபர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று செப்டம்பர் மாத இறுதியில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. அத்துடன் அப்படி ஹாக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள் எதுவும் அரசியல் நோக்கங்களுக்காக ஹாக் செய்யப் பட வில்லை மாறாக நிதி சம்பந்தமாகதான் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஹாக் ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் போலியான மார்க்கெட்டிங் நிறுவனங்களால் ஸ்பம் (spam) வழியில் பொய்யான நிதிதகவல்களை அளித்து, அந்த நிறுவனங்கள் மூலமாகத்தான் இந்த ஹாக் நடந்தது என்றும் அறிவித்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வார கடைசியில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஜூலை – செப்டம்பர் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்பார்த்ததை விட ஃபேஸ்புக்கின் வருவாய் குறைவாகவே இருந்து உள்ளது. எனினும் லாபம் சற்று உயர்வாகவே இருந்திருக்கிறதாம். மூன்று மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளில் ஒரே நாளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் ஃபேஸ்புக் தனது சந்தை மதிப்பில் 119 பில்லியன் டாலரை இழந்தது. ஜூலை – செப்டம்பர் காலாண்டின் இறுதியில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 227 கோடி மாதாந்தர பயன்பாட்டாளர்கள் இருந்துள்ளனர். இது எதிர்பார்க்கப்பட்ட 229 கோடி எண்ணிக்கையை விடக் குறைவாகும்.

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டில் 5.14 பில்லியன் டாலரை வருவாயாக ஈட்டியிருந்தது. நடப்பு ஆண்டின் ஜூலை – செப்டம்பர் காலத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 13.73 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இது 33 விழுக்காடு வளர்ச்சியாகும். எனினும், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் ஃபேஸ்புக்கின் வருவாய் 13.77 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர் பார்க்கப் பட்டது. இந்தாண்டு முழுவதும் வருவாய் வளர்ச்சியின் வேகம் குறைவாகவே இருக்கும் எனவும், செலவுகள் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் கடந்த காலாண்டிலேயே ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!