ஃபேஸ்புக் மூலம் உங்கள் நட்பை காதலாக்கிக் கொள்ள உதவும் டேட்டிங் சேவை வந்தாச்சு!

ஃபேஸ்புக் மூலம் உங்கள் நட்பை காதலாக்கிக் கொள்ள உதவும் டேட்டிங் சேவை வந்தாச்சு!

மேலை நாடுகளின் மூலம் நம் நாட்டில் எவ்வளவோ சமூக – பொருளாதாரத் தாக்கங்கள் ஏற்படு கின்றன. இவற்றில் ஒன்றுதான் டேட்டிங் எனப்படுவது. அவர்களது நாடுகளில் வேண்டுமானால் அது இயல்பாக சகஜமாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டு பண்பாட்டுக் கலாச்சார சூழலுக்கு இது முற்றிலும் முரணானதாகும். ஆனாலும் நம் நாட்டில் டேட்டிங் கலாச்சாரம் பரவி வருகிறது. டேட்டிங் என்பது நம் கலாச்சாரத்தில் இல்லை. இன்று டேட்டிங் அதிகம் பரவி வருவதால் குற்றம் செய்பவர்களும் அதிகமாகியிருக்கிறார்கள். இந்நிலையில் சகலருக்கு தெரிந்த Facebook நிறுவனத்தின் ப்ரத்தியேக டேட்டிங் அம்சமான Facebook Dating தற்போது சிங்கப்பூரில் பயன்பான்டிற்கு வந்துள்ளது!

டேட்டிங்க் எனப்படும் குறைகால காதலர்களை தேடும் செயலுக்கு உலக அளவில் பல அமோக வலைதளங்கள் இயங்கி வருகின்றது. குறிப்பாக டின்டர், பம்பல் போன்றவை இதற்காகவே தனித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனினும் இந்த வலைதளங்களில் நுழைய பேஸ்புக்கின் கணக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

முதன் முறையாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சோதனை முறையில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இதே டேட்டிங் சேவையை கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சோதனை முறையில் பேஸ்புக் நிறுவனம் வழங்கியது. இந்நிலையில் தற்போது சிங்கபூர் நாட்டிலும் இந்த பேஸ்புக் டேட்டிங் சேவையினை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.

இதன் மூலம் தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட 19 நாடுகளில் பேஸ்புக் டேட்டிங் மக்கள் பயன் பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த பேஸ்புக் டேட்டிங் சேவை மூலம், பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்களுக்கான ஜோடிகளை தேர்வு செய்யவும் முடியும். இந்த சேவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!