தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு!

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு!

மிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஜூன் 6-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மாநில மக்கள் நல்வாழ்வு துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு 2 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகவும் ஜூன் 3 முதல் 6 வரை மட்டுமே தடுப்பூசி போட முடியும், அதன்பின் மத்திய அரசிடமிடருந்து தடுப்பூசி வந்த பிறகே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும், மே மாதத்திற்கான தடுப்பூசி 1.8 லட்சம் இன்னும் மத்திய அரசிடமிடருந்து வர வேண்டி உள்ளது. ஜூன் மாதத்திற்கான தடுப்பூசியும் வர வேண்டி உள்ளது என மாநில மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலைக்கு தமிழ்நாடு அதிகளவில் பாதிக்கப்பட்டது. தற்போது முழு ஊரடங்கு, தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி பற்றியும் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தில் பல ஊர்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு நேற்று 27,936 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

டெயில் பீஸ்

இன்று மாலை மேலும் 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தடையும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. அதன்படி 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசியானது மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!