December 9, 2021

விசா காலம் முடிந்தோர் 4 நாள்களில் வெளியேற வேண்டும் – அமீரகம் அதிரடி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1க்கு பின் காலாவதியான சுற்றுலா அல்லது வருகை விசா பயணிகள் நாட்டைவிட்டு வெளியேற அல்லது நீட்டிக்க இன்னும் 4 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையத்தின் (ஐ.சி.ஏ) சமீபத்திய அறிவிப்பின்படி, காலாவதியான வருகை அல்லது சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர் களுக்கு ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 11 வரை ஒரு மாதத்திற்கு அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் விசா காலம் முடிந்தவர்கள் காலத்தை நீட்டிப்பதற்கும், வேலைவாய்ப்பு விசாவாக மாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விசா புதுப்பிக்கப்படாவிட்டால் அல்லது தனிநபர் நாட்டிலிருந்து வெளியேறவில்லை என்றால் அதிகப்படியான அபராதம் வசூலிக்கப்படும்.

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வருகை அல்லது சுற்றுலா விசாக்களை 2020 டிசம்பர் இறுதி வரை நீட்டிப்பதற்கான முந்தைய முடிவை ரத்து செய்தது.