March 29, 2023

தளபதி 65 படத்துக்கு பூஜை போட்டாச்சு!- ஸ்பெஷல் ஸ்டில்ஸ்!

மிழ் சினிமாவின் தங்க மீன் என்று வர்ணிக்கப்படும் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்திற்கு இன்று பெருங்குடியில் உள்ள சன் டிவி ஸ்டூடியோவில் மிகவும் எளிமையான முறையில் பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் – அனிருத் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

இந்த தளபதி65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவரைத் தொட்ர்ந்து 2ஆவது ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று, குக் வித் கோமாளி புகழ், பூவையார், வித்யுத் ஜம்வால் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோரும் நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கிடுச்சு. ஜஸ்ட் 2 நாட்களுக்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து தேர்தலுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக தகவல். இனி இன்றைய பூஜை ஸ்டில்ஸ் இதோ: