September 17, 2021

விடுதலைப் புலிகள் இயக்க எக்ஸ் தளபதி கருணா புதுக் கட்சி தொடங்கிட்டார்!

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவராக இருந்தவர் கருணா. பின்னர் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறிய அவர், இலங்கை அரசுடன் கைகோத்துக் கொண்டார்.இதன் தொடர்ச்சியாக, கடந்த 2009-ஆம் ஆண்டில் இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ராஜபக்சே தலை மையில் அமையப்பெற்ற இலங்கை அமைச்சரவையில் இணை அமைச்சர் பொறுப்பு கருணாவுக்கு வழங்கப்பட்டது.

karuna feb 12

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடை பெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றார். சிறீசேனா அதி பரானதும், முந்தைய ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணை நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்பட்டன. அப்போய்ஜி கட்சியிலிருந்து ஒதுங்கியே இருந்த கருணா, புதிதாக பொறுப்பேற்ற சிறிசேனா அரசால் சில வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இதனிடையே , கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து கருணா, புதிதாக ‘ஐக்கிய தமிழர் சுதந்திரக் கட்சி’ என்ற அரசியல் கட்சியை நேற்று தொடங்கியுள்ளார்.

பட்டிகோலா என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களுடன் புதிதாக கட்சி தொடங்கியுள்ள கருணா, தமிழர்கள் வசிக்கும் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தனது கட்சியின் அலுவலகங்களை திறந்துள்ளார். மேலும், தனது கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலகத்திலும் விண்ணப்பித்துள்ளார்.