பாஜக வேட்பாளர் காரில் வாக்குபதிவு எந்திரம் : மறுவாக்கு பதிவுக்கு உத்தரவு! வீடியோ!

பாஜக வேட்பாளர் காரில் வாக்குபதிவு எந்திரம் : மறுவாக்கு பதிவுக்கு உத்தரவு! வீடியோ!

ஸ்ஸாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் நேற்று 2 ம் கட்ட தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே ரதாபரி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்னேந்து பாலின் காரின் பின்பகுதியில் வாக்குப்பதிவு எந்திரம் எடுத்து செல்லப்பட்டது. அப்போது இந்த தகவலை அறிந்த எதிர்க்கட்சியினர் காரை தடுத்து நிறுத்தி வாக்குப்பதிவு எந்திரம் காரில் இருப்பதை வீடியோவாக பதிவு செய்தனர். அந்த வீடியோ இணையம் முழுவதும் வைரலான நிலையில் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்ஸாமில் நேற்று 39 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தவிர பெரிதாக எங்கும் நடக்கவில்லை. 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இதில் கரீம்கஞ்ச் ரத்னாரி தொகுதிக்கு உட்பட்ட எம்.வி. பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு வாக்கு இயந்திரங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட கார் மீது தாக்குதல் நடந்ததாம்

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வோரு முறை தேர்தல் நடக்கும்போதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு இன்றி எடுத்து செல்லப்படுகின்றன. ஆனால், இந்த முறை பாஜக வேட்பாளரின் காரிலேயே எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதை அடுத்து அஸ்ஸாம் தேர்தல் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்துச் சென்ற போது கார் பிரேக் டவுன் ஆனதால், வேறு வழியின்றி அப்பகுதியில் வந்த வாகனத்தை வழிமறித்து லிப்ட் கேட்டு சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும், அது பாஜக வேட்பாளருக்கு சொந்தமான கார் என்று அதற்கு பின்னர் தான் தெரியவந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டதால் அந்த காரை தடுத்து நிறுத்திய சிலர் காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், வாக்கு இயந்திரத்துடன் பாஜக வேட்பாளரின் காரில் சென்ற தேர்தல் அதிகாரிகள் 4 பேரை இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வந்திருக்கிறது.

error: Content is protected !!