ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம் + புயல் : டிரெண்டிங்காகும் #PrayForJapan!

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கம் + புயல் : டிரெண்டிங்காகும் #PrayForJapan!

ஹகிபிஸ் புயல் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கனமழையால் மத்திய ஜப்பானில் உள்ள வீடுகள் சேதமடைந்ததுடன், குடியிருப்பு பகுதிகள் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்து உள்ள நிலையில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அள்வுகோலில் 5.7 ஆகப் பதிவாகி யது. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்கப் புவியியல் மையம், “ஜப்பானில் சிபா கென் மாகாணத் தில் இன்று (சனிக்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 80 கிலோ மீட்டர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

முன்னதாக சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று மாலை ஜப்பானில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிவேக காற்றினாலும், மழைப்பொழிவாலும் மத்திய ஜப்பானில் உள்ள சிபா நகரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள் முழுவதும் மழைநீர் சூழந்துள்ள நிலையில், காரில் இருந்த ஒருவர் வெளியே வரமுடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் மொழியில் வேகம் என்று பொருள்படும் ஹகிபிஸ் புயலால் பெரும்பாலான இடங் களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயலின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தலைநகரான டோக்கியோவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

ஜப்பானில் 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலுக்குப் (இப்புயலில் 1000க்கும் அதிகமாக மக்கள் பலியாகினர்) பிறகு ஏற்பட உள்ள சக்திவாய்ந்த புயல் இதுவாகும். புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஜப்பான் அரசு முன்னரே இறங்கி இருந்தது. இந்த நிலையில் ஹகிபிஸ் புயல் தாக்கத்திலிருந்து ஜப்பானை காக்க #PrayForJapan என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் நெட்டிசன்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Related Posts

error: Content is protected !!