June 21, 2021

திமுக ஆட்சியில் ஒவ்வொரு குழந்தையும் ரூ.15 ஆயிரம் கடனோடு பிறந்தது,, அதிமுக ஆட்சியில் 40 ஆயிரமாகி போச்!

“தமிழகத்தின் கடனை ஒப்பிட்டால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.40 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூ.40 ஆயிரம் கடனோடு பிறக்கிறது. இதுதான் வளர்ச்சியா?” என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்

tn durai jy 30

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் துரை முருகன் பேசும் போது, “இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. பற்றாக் குறை என்பது இரண்டு விதங் களில் வரலாம். அதிகமான திட்டங்களை செயல்படுத்தியதால் பற்றாக்குறை வரலாம். வருவாய் இல்லாவிட்டா லும் பற்றாக்குறை ஏற்படும்.

தமிழகத்தின் வருவாயை அதிகரிக்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட அன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதித் துறை செயலாளர், ‘பெட்ரோலியப் பொருள்கள் மூலம் கிடைத்து வந்த வருவாய் வெகுவாக குறைந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார். அதுபோல சிமென்ட், கம்பி போன்ற கட்டுமானப் பொருள்கள் மூலம் கிடைத்து வந்த வருவாயும் குறைந்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் புதிய கிரானைட் கொள்கை அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டில் சுரங்கத் தொழிலுக்கு தமிழகத்தில் வாய்ப்புகள் இல்லை என கூறியுள்ளீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அமலுக்கு வந்தால் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும். அதுபோல பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் நிதிச் சுமை ஏற்படும். எனவே, தமிழகத்தின் வருவாய், நிதி பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டுகளில் வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை குறைத்து காட்டப்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி. மின்துறை கடனையும் சேர்த்தால் இது ரூ.4 லட்சம் கோடிக்குமேல் வருகிறது. கடன் வாங்குவது தவறு என கூறவில்லை. அமெரிக்க அரசுகூட கடன் வாங்குகிறது. ஆனால், கடந்த 2010-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, 2006 அதிமுக ஆட்சி யில் ரூ.56,094 கோடியாக இருந்த கடன் அளவு, திமுக ஆட்சியில் ரூ.85,395 கோடியாக உயர்ந்துள்ள து. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூ.15 ஆயிரம் கடனோடு பிறக்கிறது என குற்றம்சாட்டினார்.ஆனால், தற்போது தமிழகத்தின் கடனை ஒப்பிட்டால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.40 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூ.40 ஆயிரம் கடனோடு பிறக்கிறது. இதுதான் வளர்ச்சியா?

கடந்த 2013-14ம் நிதியாண்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.12,700 கோடி செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதுபோல மத்திய அரசு ஒதுக்கிய நிதியும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிதி மேலாண்மை யில் தோல்வி அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. வருவாய், நிதிப் பற்றாக்குறையும் கடன் சுமையும் இதை உறுதிப்படுத்துகிறது. தமி ழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோச மடைந்துள்ளது. தமிழகத்தில் நிதி மேலாண்மையும் இல்லை. ஜனநாயகமும் இல்லை” என்று துரைமுருகன் பேசினார்.

இதன் பின்னர் பேசிய நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், “வருவாய் பற்றாக்குறையைத் தவிர்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நிலை மாறவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்தவரை செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் வருவாய் வரவும் கூடும் எனக் கருதுகிறோம். அதுவரை, இந்த கடினமான பாதையைத்தான் நாம் கடந்து செல்லவேண்டியுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது