March 22, 2023

டிவி சேனல்களுக்கு தடையாணை போக்கு மிகவும் ஆபத்தானது! – பினராயி விஜயன் எச்சரிக்கை!

அண்மையில் நாட்டின் தலைநகரில் நிகழ்ந்ததை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி கள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த இரு சேனல்களுக்கும் நேற்று இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை உத்தரவிட்டதை பல தரப்பினரும் கண்டித்த நிலையில் இரு சேனல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேரம் தடை விதித்து, நீக்கியுள்ளது. ஆனாலும் அறிவிக்கப் படாத அவசரநிலை நாட்டில் நிலவுவதைக் காட்டுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட் டத்தின்போது, அதன் எதிர்ப்பாளர் களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரம் நடந்ததை பல தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின. இதையடுத்து, நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் செய்திகள் ஒளிபரப்பக் கூடாது என்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.ஆனால், விதியை மீறி மலையாள செய்தி சேனல்களான ஏசியாநெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களும் செயல்பட்டதாக கூறப் படுகிறது. இதையடுத்து, இந்த இரு சேனல்களுக்கும் நேற்று இரவு 7.30 மணி முதல் நாளை இரவு 7.30 மணி வரை தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

ஏசியாநெட் நியூஸ் ஒரு வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டிய தாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டது போல் தெரிவதாகவும் தகவல் ஒலிபரப்புத்துறை கூறியுள்ளது. மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர் களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை குவிப்பதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு சேனல்களில் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருந்ததாகவும் தகவல் ஒளிபரப்புத்துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில், கேரள சேல்கள் மீதான தடைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான மனிஷ் திவாரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை ஊடக சுதந்திரம் மீதான தாக்குதல், என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கேரள சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்து, பின்னர் நள்ளிரவில் நீக்கியது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்து, காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர், “கேரளாவில் இரு மலையாள மொழிச்சேனல்களான ஏசியாநெட், மீடியா ஒன் ஆகியவற்றுக்கு 48 மணிநேரம் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது கண்டிக்கத்தக்கது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. இந்த போக்கு மிகவும் ஆபத்தான போக்கு. எதிர்காலத்தில் வரும் அபாயத்தை உணர்த்தும் சமிக்ஞையாகவே பார்க்கிறேன்.

பத்திரிகை சுதந்திரத்தில் மத்திய அரசு தனது வரம்பை மீறிச் செயல்பட்டு, தனது எல்லைகளை மீறுகிறது. யாரேனும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், சங் பரிவார் அமைப்புகளையும் விமர்சித்தால், இதுதான் பாடம் என்ற வகையில் மிரட்டல் விடுத்துள்ளது.

இத்தகைய போக்குக்கு எதிராக ஒவ்வொருவரும் ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அச்சத்தை உண்டாக்கி ஒவ்வொருவரும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறார்கள் என மத்திய அரசு தந்திரமாகச் செயல்படுகிறது.இதுபோன்ற போக்கு அடிக்கடி நாடாளுமன்றத்திலும், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய அமைப்புகளிடமும் எதிரொலிக்கிறது, நீதித்துறை மீது சமீபகாலமாக நடக்கிறது.

டெல்லி போலீஸார், ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்தது தடைவிதிக்கப்படுவதற்கான காரணம். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிப்பது எப்படி சட்டவிரோதமாகும். ஒவ்வொரு குடிமகனும் தங்களின் கருத்துக்களை அச்சமின்றி தெரிவிக்க அரசியலமைப்புச் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது, அந்த சம்பவங்களை அறிந்து மக்களுக்குத் தெரிவிக்க ஊடகங்களுக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனச் சொல்லப்படும் ஊடகம் சுதந்திரமாகவும், நியாயமாகவும்,நடுநிலையோடும் செயல்பட வேண்டும்”என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்