ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையில் 4 லட்சம் சிறுவர்கள் – வீடியோ

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையில் 4 லட்சம் சிறுவர்கள் – வீடியோ

ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள், சமீப காலமாக பலத்த பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஈராக்கில் நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரமும், சிரியாவில் ராக்கா நகரமும்தான் அவர்கள் கைவசமுள்ள முக்கிய நகரங்கள் ஆகும். மற்றபடி, அவர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் இருந்த பல இடங்களை ஒவ்வொன்றாக அரசு படைகளிடம் பறி கொடுத்து விட்டனர்.

isis nov 16

மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மிகவும் பலமிக்க அமைப்பாக உள்ளது.இந்த மொசூல் நகரை பிடிக்கும் நோக்கில் ஈராக் படைகள் முன்னேறி வருகின்றன. இதனால் எந்த நேரத்ட்திலும் ஐ. எஸ் அமைப்பு இழக்கலாம். இரு தரப்பிலும் உக்கிரமான சண்டை நடந்து வந்தது. மேலும் இந்த அமைப்பில் சிறுவர்கள் இணைந்து செய்ல்படுவதாக பல தகவல் முன்னரே வெளியாகியுள்ளது

இந்நிலையில், ஈராக் நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட தகவலில். “அதில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 லட்சம் சிறுவர்களை மூளை சலவை செய்து மனித வெடிகுண்டுகளாக மாற்றும் முயற்சியை ஐ.எஸ் அமைப்பு மேற்கொண்டு வந்துள்ளது.இதே போல், நகரில் உள்ள பாடசாலைகளின் கல்வி முறையைக் கூட ஐ.எஸ் அமைப்பினர் மாற்றி மாணவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இந்த பாடசாலை கல்வி திட்டங்களில் ‘வெடி குண்டு இணைக்கப்பட்ட உடைகளை எப்படி அணிவது, பெண்களை எப்படி பிணையக்கைதிகளாக பிடிப்பது, கூட்டத்தின் மீது தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது உள்ளிட்ட பல பயிற்சிகளை மட்டுமே’ வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற சிறுவர்களை உடனடியாக இணங்கண்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்காவிட்டால் பெரும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது” என மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!