என்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்!

தமிழோ, ஹிந்தியோ அல்லது ஆங்கில சினிமாக்களில் அதிகமான கதைகள் வந்தது காதல் கதைகள் என்று சொன்னால் மிகையாகாது. பிரபல சினிமா ரிப்போர்ட்டர் உண்மைத் தமிழன் சொன்னது போல் ‘வரம், சாபம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்ச்சாகம், வெற்றி, தோல்வி, பலம், பலவீனம், பிரிவு, துணை, தன்னம்பிக்கை, சுயநலம், பித்து, அனுபவம், பரவசம், வலி, சுகம், இனிமை, கசப்பு, வாழ்க்கை, மரணம் – இவை-காள் ‘காதல்’ பற்றி நம் தமிழ் சினிமா கற்றுக் கொடுத்த பாடங்கள்… 100 வருடங்கள் தாண்டிய தமிழ் சினிமா வராற்றில் காதல் இல்லாத திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்! ஆக தமிழ் சினிமாவையும் காதலையும் பிரித்து பார்க்க முடியாது….அதே சமயம் இந்த 101 வருட தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் காதலை பல பரிமாணங்களில், பலவிதமான உணர்வுகளில், பல விதமான சந்தர்ப்பங்களில் கையாண்டிருக்கின்றார்கள்” என்றாலும் கெளதம் வாசுதேவன் வெளிக் கொணரும் காதலே தனிரகம்..அவரின் வழக்கமான வாய்ஸ் ஓவரில் தனுஷை வைத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பாய விட்ட சினிமாதான் என்னை நோகி பாயும் தோட்டா. ஆனால் மூன்றாண்டு ஓல்ட் மூவி என்ற நினைப்பே இல்லாமல் இன்றைக்கும் கிக்-கான படமாக இருப்பதுதான் கெளதம் வாசுதேவன் மேஜிக்.

கதை என்னவென்றால் ஹீரோ ரகு (தனுஷ்), படிக்கு கல்லூரியில் ஒரு படப்பிடிப்பிற்காக வரும் நடிகை லேகாவைச் (மேகா ஆகாஷ்) சந்திக்கிறான். வழக்கம் போல் இருவரும் காதலிக்கிறார்கள். இதை அடுத்து வழக்கம் போல் நாயகி லேகாவை வளர்த்து சினிமாவில் நடிக்க வைக்கும் குபேரன் (செந்தில் வீராசாமி), காதலுக்கு முட்டுக் கட்டை போட்டு ஹீரோயினை மும்பைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். இதன் பின்னர் 4 வருடங்கள் ஆன நிலையில் திடீரென நாயகி மேகா ஆகாஷிடமிருந்து போன் – அதில்’ காணாமல் போன உன் அண்ணன் சசிகுமாருடன் தான் இருப்பதாகவும், அவர் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறார்’ என்றும் பதட்டத்துடன் தகவல் தெரிவிக்க உடனே மும்பை போக பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் தோட்டா ஸ்டோரி.

நாயகன் தனுஷ் இதிலும் காதல் இளவரசனாக வந்து அசத்தி இருக்கிறார். நாயகி மேகா ஆகாஷ்-கிற்கு இந்த திரைப்படம்தான் முதல் படமாம். அழகாக இருக்கிறார் கூடவே தனுசுடன் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடுகிறார். குபேந்திரன் கதாபாத்திரத்தில் செந்தில் வீராசாமி ஸ்கோர் செய்திருக்கிறார். சசிகுமார். சுனைனா, வேல.ராமமூர்த்தி, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோரும் வருகிறார்கள், போகிறார்கள்.

ஜோமோன் டி ஜான், மனோஜ் பரமஹம்சா, எஸ்.ஆர்.கதிர் என மூன்று பேர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். அபாரம். தர்புகா சிவா, பாடல் & பின்னணி இசையில் தன்னைக் கவனிக்க வைத்து விட்டார்

மொத்தத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா – இளசுகளை கவரும்

மார்க் 3. 25 / 5