September 18, 2021

டி 20 : இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. கேப்டன் கோலி, ராகுலுடன் களமிறங்கினார். முதல் 4 ஓவர்களில் 33 ரன்கள் வர இந்தியா சிறப்பான துவக்கத்தைப் பெற்றது.

criket jan 26

8 ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஜோர்டன் பந்தில் ஆட்டமிழந்தார். ரெய்னா களமிறங்க, அடுத்த சில ஓவர்களில் கோலி 29 ரன்களுக்கு வெளியேறினார். இதற்கு பின் ஆட வந்த யுவராஜ் சிங் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி வந்த ரெய்னா 34 ரன்களுக்கு வீழ்ந்தார்.தொடர்ந்து மனீஷ் பாண்டே 3, பாண்ட்யா 9 என ஆட்டமிழக்க 19 ஓவரில் இந்திய அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி ஓவரில் தோனி சற்று ஆறுதல் தந்தார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் 2 ரன்கள், நடுவில் 2 பவுண்டரி என 12 ரன்களை தோனி சேர்த்தார். 4வது பந்தில் மறுமுனையில் இருந்த ரசூல் ரன் அவுட் ஆக, இந்திய 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் தனது இன்னிங்ஸை முடித்தது.

148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 1‌9ஆவது ஓவரில் எட்டியது. தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 19 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இயான் மோர்கன் 51 ரன்களும், ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.