இன்ஜினியரிங் காலேஜ் மவுசு குறையுது + இன்ஜி. ஸ்டூடன்ஸ் சூசைட் எகிறுது!

இன்ஜினியரிங் காலேஜ் மவுசு குறையுது + இன்ஜி. ஸ்டூடன்ஸ் சூசைட்  எகிறுது!

தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீதான மோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கு கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது உள்ளிட்ட சில காரணங்கள் கூறப்படுகின்றன.இந்தியாவில் பொறியியல் எனப்படும் இன்ஜினியரிங் , தொழில்நுட்பத் துறை தனது ஆதிக்கத்தைத் தொடங்கிய 1990-களுக்குப் பிறகு பொறியியல், தகவல் தொழில்நுட்பப்படிப்புகள் படிப்பதற்கு குக்கிராமங்களில் இருந்தும் மாணவர்கள் வரத் தொடங்கினர். பட்டி தொட்டிகளில் எல்லாம் புதிது புதிதாக    இன்ஜினியரிங்  கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

edit sep 3

தகவல் தொழில்நுட்பம் படித்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களைக் காட்டிலும், மருத்துவர்களைக் காட்டிலும் பல மடங்கு சம்பாதிக்கத் தொடங்கியது, இன்ஜினியரிங், தொழில்நுட்பப் படிப்புகள் மீதான மோகத்தை வெறியாக மாற்றியது. விளைவு கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதிலும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 3 மடங்காகவும், மாணவர் சேர்க்கை 4 மடங்காகவும் உயர்ந்தது. கடந்த 2006-07ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் 1,511 ஆக இருந்த இன்ஜினியரிங்  கல்லூரிகளின் எண்ணிக்கை இப்போது 4,270 ஆகவும், 5.50 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 19.03 லட்சமாகவும் உயர்ந்தது.

ஆனால், ராக்கெட் வேகத்தில் இருந்த  இன்ஜினியரிங்  மாணவர்கள் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்துக்கு குறைந்துள்ளது. தமிழகத்தில்    இன்ஜினியரிங் படிப்புக்கென 10 அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் 3 கல்லூரிகள், 546 சுயநிதிக் கல்லூரிகள், 17 அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள் என 576 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு அனுமதித்த இடங்கள் 2.93 லட்சம். ஆனால், 2014-15-இல் நிரம்பிய இடங்களோ 1.67 லட்சம் மட்டுமே. குறிப்பாக, 2.78 லட்சம் இடங்களைக் கொண்ட சுயநிதிக் கல்லூரிகளில் 1.26 லட்சம் இடங்கள் காலியாகவே இருந்தன. கடந்த ஆண்டிலும் இதே நிலைதான் நீடித்தது. சுயநிதிக் கல்லூரிகளில் 2.02 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 94 ஆயிரம் இடங்கள் காலியாகவே இருந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி
வளாகங்களில் கடந்த 8 மாதங்களில் 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் அண்ணா பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத் திலும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்பு  இன்ஜினியரிங்  கல்லூரிகள், சுயநிதி   இன்ஜினியரிங் கல்லூரிகள், தனியார்  இன்ஜினியரிங்  கல்லூரிகளில் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளின் விவரங்கள், தற்கொலைக்கான காரணங்கள், விசாரணை அதிகாரியால் கொடுக்கப்பட்ட இறுதி அறிக்கை ஆகியவை குறித்த தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத் தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தே.ராஜு கோரியிருந்தார்.

இதற்கு சென்னை கிண்டி யில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் பொது தகவல் அலு வலர் அளித்த பதிலில் “ கடந்த 2012-ல் இருந்து 2016-ம் ஆண்டு வரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இதில் கடந்த ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் வரை 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தே.ராஜு, “போதிய கவுன்சலிங் இல்லா ததாலும், கல்விக் கடன் நெருக்கடியாலும்   இன்ஜினியரிங்  கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அண்ணா பல் கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன்.

8 மாதங்களில் 7 மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு நீதி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Posts

error: Content is protected !!