பதவி விலகுகிறார் ட்விட்டர் சி.இ.ஓ. எலான் மஸ்க்? – வாக்கெடுப்பில் ஷாக் கொடுத்த பயனாளர்கள்!

பதவி விலகுகிறார் ட்விட்டர் சி.இ.ஓ. எலான் மஸ்க்? – வாக்கெடுப்பில் ஷாக் கொடுத்த பயனாளர்கள்!

ட்விட்டர் தலைமைப் பொறுப்பான சீஇஓ பதவியிலிருந்து விலக வேண்டுமா அல்லது நீடிக்க வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பை எலான் மஸ்க் துவக்கி  இருந்தார். அதிலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார் . இதை அடுத்து பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்க் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இச்சூழலில் என்ன முடிவெடுக்கப் போகிறார் எலான் மஸ்க் என்பது தான் இப்போதைக்கு எழுந்துள்ள எதிர்பார்ப்பு .

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. அதன் உச்சகட்டமாக தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சில முக்கியமான செய்தியாளர்களின் கணக்குகளை கடந்த வியாழக்கிழமை முடக்கினார் எலான் மஸ்க். அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோநியோ குட்டரஸ் வரை அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கையை கைவிட்டார் எலான் மஸ்க். அந்த சூடு தணிவதற்குள் கொள்கை மாற்றம் செய்கிறேன் என்ற பெயரில் அடுத்த சிக்கிலில் சிக்கி தவித்து வருகிறார் எலான் மஸ்க்.

மற்ற சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளை ட்விட்டர் தளத்தில் விளம்பரப்படுத்தும் நோக்கில் மறு பதிவு செய்வதற்கு எலான் மஸ்க் அதிருப்தி தெரிவித்து, அதுபோன்று மீள் பதிவிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். கூடவே, தான் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா எனக் கேட்டு பயனர்களை கருத்துக் கூறுமாறு கேட்டிருந்தார். மேலும் பயனர்களின் முடிவிற்கு தான் கட்டுப்படுவதாகவும் கூறியிருந்தார் எலான் மஸ்க். அதில் வாக்களித்து உள்ள 57.5% பேர் கிளம்பய்யா என்று சொல்லி இருக்கிறார்கள்..42.5% பேர் மட்டுமே கண்டினியூ பண்ணச் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த ட்வீட்டை அடுத்து இன்னும் சில ட்வீட்களையும் மஸ்க் பதிவு செய்திருந்தார். அதில், நீங்கள் அளிக்கும் வாக்கை கவனமாக அளியுங்கள். ஏனெனில் உங்கள் விருப்பம் தான் நிச்சயமாக நிறைவேறும் என்று பதிவிட்டுள்ளார். மற்றுமொரு ட்வீட்டில் அதிகாரத்தை விரும்புபவர்கள் தான் அதற்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர்களாக இருக்கின்றனர் என்றும் கூறி இருந்தார்.. இப்படியான சூழலில் பெருவாரியான பயனர்கள் விருப்பத்தை ஏற்று எலான் மஸ்க் பதவி விலகி விடுவார் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!