ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் ரத்து !- எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் ரத்து !- எலான் மஸ்க் அறிவிப்பு

ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரபல தொழிலதிபர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க இருப்பதாக, உலகின் முதல் பணக்காரராக விளங்கும் அமெரிக்காவின் எலான் மஸ்க் அண்மையில் அறிவித்திருந்தார். ஆனால் அதே நேரத்தில் ட்விட்டர் இணையதளத்தில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த போலி கணக்குகள் குறித்த எண்ணிக்கையை அறிவித்தால் மட்டுமே ஒப்பந்தத்தை செயல்படுத்தப் போவதாக அதன்பிறகு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், போலி கணக்குகள் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் தவறான தகவல்களை மாற்றி மாற்றி அறிவிக்கிறது என்று கூறிய எலான் மஸ்க், தற்போது திடீரென ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக கூறி உள்ளார். இதனால் அமெரிக்காவில் ட்விட்டரின் பங்குகள் 7 சதவீதம் சரிந்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!