ட்விட்டரை வாங்க சுமார் 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்ற எலான் மஸ்க்!.

ட்விட்டரை வாங்க சுமார் 32,500 கோடி மதிப்புள்ள பங்குகளை  விற்ற எலான் மஸ்க்!.

ர்வதேச அளவில் டாப் மில்லியன்ர்களில் ஒருவாராகன எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்கள் செலவு செய்து, ட்விட்டரை வாங்கியதுதான் கடந்த சில நாட்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், ட்விட்டரை வாங்குவதற்கு சில காலங்களுக்கு முன்பு எலான் மஸ்க்குக்கு எவ்வாறு இவ்வளவு தொகையை கிடைக்கும் என்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த செவ்வாயன்று, கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டாலர் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா இன்க் நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவரின் நிகர சொத்து மதிப்பு 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கீழ் சரிந்து விட்டதாகவும் தகவல் பரவுகிறது..!

ஆம்.. நவம்பர் எட்டாம் தேதி எலான் மஸ்க் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்வதற்கு முன்பு நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளின் உரிமையாளராக இருந்திருக்கிறார். ஆனால் 44 பில்லியன் டாலர்கள் செலவுசெய்து எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து, ஈக்விட்டி மற்றும் கடன் வழியாக நிதி உதவி பெற்று இருக்கிறார். தற்பொழுது இதனை நிர்வகிக்க கூடுதலாக தன்னுடைய எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் பங்குகளையும் விற்பனை செய்திருக்கிறார் என்று சேதி கிடைத்துள்ளது. .

செவ்வாயன்று வெளியிடப்பட்ட செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் செவ்வாய் அன்று வெளியிட்ட அறிக்கைகளின் படி, மஸ்க் டெஸ்லாவின் 19.5 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார். பங்குகளின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்த பொழுது, எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை 2021 ஆம் ஆண்டில் விற்பனை செய்திருக்கிறார். இந்த ஆண்டு ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளையும், ஆகஸ்ட் மாதத்தில் தோராயமாக ஏழு பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளையும் விற்பனை செய்திருக்கிறார். தன்னுடைய நிறுவனமான டெஸ்லாவில் செய்த, தனது முதலீட்டில் இருந்தே ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கு இவர் பணத்தை கொட்டிக் கொண்டிருந்த நிலையில், தனது மற்ற பங்குதாரர்களின் நம்பியிருந்தார்.

ஈக்விட்டி முதலீட்டுக்கான பினான்ஸ், ரோன் பாரோவின் பாம்கோ, ஆண்டர்சன் ஹோரோவிட்ஸ், டிவிட்டரின் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டார்ஸி மற்றும் சவுதி அரேபிய இளவரசரான அல்வாலித் பின் தலால் பின் அப்துல் அஸிஸ் ஆகிய அனைவரின் நிதி உதவியை எலான் மஸ்க் சார்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்க்கின் இந்த தனிப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து, ட்விட்டரில் சவூதி அரேபியாவின் பங்குகளால் ஏற்படக் கூடிய தேசிய பாதுகாப்பு குறித்த தாக்கங்களை விசாரணை செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதாக, NBC ஏற்கனவே செய்தி வெளியிட்டது.ஆனாலும் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும், ட்விட்டரை வாங்குவதற்கு போதுமான நிதியை தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக ஏற்பாடு செய்து விட்டேன் என்று ஆகஸ்ட் 9 ஆம் தேதி மஸ்க் தன்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஆனாலும் கடந்த சில மாதங்களாக ட்விட்டரை வாங்குவதற்கு போராடி வந்திருந்த எலான் மஸ்க் ஏப்ரல் மாதத்தில் அதை உறுதி செய்தார். ட்விட்டர் ஒப்பந்தம் முடிந்த பிறகு, ட்விட்டரில் இருக்கும் அடிப்படை புரோகிராம் கோடுகளை மதிப்பாய்வு செய்து வருவதற்கும் வேறு சில முக்கியமான விஷயங்களுக்கும் டெஸ்லாவின் பொறியாளர்களை பணியில் அமர்த்தி உள்ளார். தற்போது, டெஸ்லாவின் பங்குகளில் 46% எலான் மஸ்க்கிடம் இல்லாத நிலையில், இது மிகப்பெரிய இழப்பாக காணப்படுகிறது. இவ்வளவு தொகை இழந்தாலும், உலகின் பணக்கார நபராக இன்னும் எலான் மஸ்க் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

டெஸ்லா மட்டுமல்லாமல் ஸ்பேஸ்எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வரும் எலான்மஸ்க், ட்விட்டர் தற்போது வளர்ச்சி பாதையில் செல்வதற்கு பல்வேறு விதமான முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு விட்டது. எனவே மற்ற நிறுவனங்களை விட டிவிட்டரை எளிதாக நிர்வகிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுவரை ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி யார் என்பதை மஸ்க் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் டிவிட்டரில் தன்னுடைய ரோலை ‘chief twit’ என்றும் நிறுவனத்திற்கு தான் மட்டுமே ஒரே நிர்வாக இயக்குனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Posts

error: Content is protected !!