November 27, 2022

“தனி ஒருவன் கனவா – தனியார் மயம் தயவா”.!

எலன் மாஸ்க் – இந்த மனிதர் தான் நேற்றிலிருந்து அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் உலக அளவில். வட ஆப்பிரிக்கா / கனடா என்று பல நாடுகளின் பிரஜையாக இருந்து கடைசியில் அமெரிக்கா மண்ணில் பிரஜையாகியனவர் தான் இந்த எலன் மாஸ்க். தொழில் நிலை வடிவமைப்பாளர், பற்றி எரியும் கனவு என பல இருந்தும் தொட்டதெல்லாம் பொன்னாகி விடவில்லை ஆரம்பத்தில் – பே பால் என்னும் ஆன்லைன் பணமாற்ற கம்பெனி தான் ஓரளவு கை கொடுத்தது. அதன் பின்னர் இன்று கனவு நினைவாகி போயிருந்தாலும் இந்த கனவுக்கு 20 வருடங்கள் ஆகியது.

இந்த கனவுக்கு அவர் நாடான அமெரிக்கா கை கொடுக்கவில்லை. ரஷ்யா வந்தார் – கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ராக்கெட்டுகளை நிறைய மவுசு இருப்பதை கண்டார். சாரி இதை செய்ய வேண்டுமெனில் முக்கியமாக தேவைப்படுவது “அதிக திறன் வாய்ந்த ராக்கெட் எஞ்சின்” அதை அமெரிக்காவுக்கே பல நாடுகளின் டெக்னலாஜி கம்பெனிகள் தான் சப்ளை செய்தது. அந்த வணிகத்தை கையகப்படுத்துவதே தான் கொள்கை என விடாமல் ரஷ்யாவுக்கு சென்று பலரை மீட் செய்தாலும் இவரை கொஞ்சமும் மதிக்கவில்லை அந்த மாபியா தொழிலதிபர்கள். சரி பழைய ராக்கெட்களை வாங்கி ஆராய்சசி செய்து நாம் கண்டுபிடிக்கலாம்னு ஒரு பழைய ராக்கெட் விலையை கேட்டால் வேண்டுமென்றே 8 மில்லியன் டாலர் என சொல்லி இவரை வெறும் கையுடன் அமெரிக்காவுக்கே திரும்ப வைத்தது ரஷியா.

திரும்ப வந்ததும் முடிவு எடுத்தார் – சரி இனிமே நாமே இதை தயாரித்தல் ஏன்னா ஏன் என்றால் இவருக்கு எட்டு மில்லியன் சொன்ன ராக்கெட் விலை வெறும் 15 % கூட மதிப்பில்லை என தெரிந்தது. அது போக அமெரிக்கா விஞ்ஞானிகளை விட ரஷியா விஞ்ஞானிகள் தான் உலகின் அதிக மூளை வாய்ந்தவர்கள் என நன்கு தெரிந்த காரணத்தினால் தான் தன்னுடைய மின்சார கார் கம்பெனிக்கு “டெஸ்லா” என பெயரிட்டார். பின்பு ஒபாமா உலகின் நெ 1 என கூறப்படும் “நாசா” தன்னுடைய – இந்த படத்தில் இருக்கும் விண்வெளி ஓடத்தின் பிராஜெக்டை 2011 முதல் அதிக செலவினால் நிறுத்தி கொள்வதாகவும் இனிமேல் நாசாவின் அதனை வேலைகளையும் அதன் போக்குவரத்து சரக்கு கையாளுதல் என அத்தனையும் தனியார் வசம் ஒப்படைக்க நினைத்த மாத்திரத்தில்தான் அமெரிக்கவின் பெரிய ராக்கெட் கம்பெனியான போயிங் – லாஹீட் மார்ட்டின் போன்ற கம்பெனிகளை புறம் தள்ளி ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனம் கையப் படுத்தியது. அந்த ஸ்பேஸ் எக்ஸ் தான் எலன் மிஸ்கின் ராக்கெட் எஞ்சின் கம்பெனி .

பல ராக்கெட்கள் – மிக குறைந்த அளவில் சாட்டிலைட் ஏவுதல் என பல டெக்னலாஜிகளை சர்வ சாதாரணமாய் செய்த கனவோடு நின்று விட வில்லை – அது என்னவென்றால் இந்த ராக்கெட்டால்லாம் போவுது.. அப்புறம் கடல்ல விழுது இதை என் நம்ம திரும்ப வருமாறு செலுத்த முடியாதா என ஆரம்பித்து அதிலும் வெற்றி கண்டதோடு நின்று விடவில்லை இவரின் தாகம்….. அடுத்து மனிதர்களை வின்வெளிக்கு அழைத்து செல்வதில் பல நாடுகள் போட்டி போட அட நம்மகிட்ட தான் திரும்ப வரும் ராக்கெட் உள்ளதே என நினைத்து ஆரம்பித்த இந்த மிஷன் தான் ஸ்பேஸ் டெமோ – பல தடைகளை தகர்த்து நேற்று அதுவும் நினைவாகியது . இனிமேல் வின்வெளி சுற்றுலா அடுத்த சில மாதங்களில் எல்லோருக்கும் சாத்தியப்படும் என்பது உண்மை.

இதுக்கெல்லாம் காரணம் தனிமனித கனவு என்றாலும் இதனை சாத்தியப்படுத்தி காட்டியதற்கு காரணம் தனியார் மயமான உலகின் நெ 1 ஸ்பேஸ் நிறுவனமான நாசாவும் தான். வழக்கம் போல பி எஸ் என் எல் சிம் கார்ட் கூட உபயோகிக்காமல் அந்நிய நாட்டு மொபைல் கம்பெனி / அமெரிக்கா வாட்சப் – பேஸ்புக் இதெல்லாம் வைத்து நம்ம நாட்டுல தனியார் மையத்தை சத்தமுடன் எதிர்க்கும் சில டுபாக்கூர் போராளிகளும் – சுயநல அரசியல்வியாதிகளும் தான். ஆயிரம் சவுண்டு உட்டாலும் சென்னை விமான நிலையம் 93 வது தடவை கூரை கண்ணாடி விழுந்தது என கூவுவதும் இவர்கள் தான். நம்மை சுற்றி இருக்கும் அதனை மாநில ஏர் போர்ட்டுக்கும் – சென்னை ஏர்போர்ட்டுக்கும் வித்தியாசம் 15 வயது பின்னோக்கிய டெக்னலாஜி. தனி மனித கனவும் – தனியார் மையமும் மாற்ற முடியாத எதிர்கால சக்திகள் ஆகும்.

இந்தியா இந்த விஷயத்தில் சீக்கிரம் முன்னோடியா திகழும் ஏன் என்றால் திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரியில் நம்ம ராக்கெட் டெக்னலாஜி ரொம்ப முன்னேறிட்டது. இதனால் தான் இப்பவே உலக நாடுகளின் பல சாட்டிலைட்களை இந்தியாவிடம் விண்ணில் சேர்க்க சொல்லி டாலர்களை அள்ளி குவிக்கிறது.

படம் – இது தான் 1971 ல் ஆரம்பிக்கிப்பட்டு 2011 ல் ரிட்டையர் ஆன விண்வெளி ஓடம் தான் இந்த அட்லாண்டிஸ் – இதன் மூலம் தான் முதன் முதல் நிலா பயணம் முதல் பல பயணங்களை கொண்ட வின் ஓடம். Already showed Space X Rocket (Falcon 9) in previous post…..

படித்ததில் பிடித்தது –

இந்திய முழுதும் தனியார் மயத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தாலும் – இந்திய முழுவதும் ஒத்துக்கொள்ள கூடிய ஒரே விஷயம் – தயவு செய்து இந்த ஸ்டேட் பேங்க் மட்டும் தனியாருக்கு வித்துருங்கன்னு சார்னு சொல்ற காரணம் – அங்க வேலை செய்யுற எல்லோருக்கும் எதோ பிரதமர் அலுவுலகத்தில் வேலை செய்றாங்கன்னு நினைப்புனு, ஓவர் சீனு சார்னு காமெடியா சொல்றது நினைவுக்கு வருது 🙂

Have a Beautiful Sunday…….