லயோலா கல்லூரி பெயரில் இப்போதும் பரவும் தேர்தல் கணிப்பு திணிப்பு!
சிங்காரச் சென்னையில் மிகப் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் குழுக்கள் ‘மக்கள் ஆய்வகம்’ என்ற அமைப்பின் சார்பிலும் ‘பண்பாட்டு மக்கள் தொடர்பகம்’ என்னும் இன்னொரு பெயரிலும் பல்வேறு விஷயங்களைப் பற்றி கருத்துக் கணிப்பு நடத்தி, ஆய்வு அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம். ஆனாலும், அவர்களின் தேர்தல் கருத்துக் கணிப்புதான் பெரிய அளவில் பேசப்படும். இவற்றில் ஒரு அமைப்பு எப்போதும் திமுக ஆட்சிக்கு வருமென்றே எப்போது கணிப்பு வெளியிடுவது வழக்கம். பல நேரங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் உருவாக்கும். இதே லயோலா குரூப் 2011ல் கருத்து கணிப்பாக திமுக 128+/234 இடங்களை பிடித்து ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று சொன்னது.ஆனால் அப்போது..மக்கள் திமுக-வுக்கு அளித்த தீர்ப்பு 18 மட்டுமே. இதன் பின்னர் 2014ல் நடந்த எம்.பி. தேர்தலில் இந்த.லயோலா குரூப் கணிப்பு 25 என்றது.அப்போது..மக்கள் திமுக அளித்த தீர்ப்பு 0 சீட். மேலும் இதே லயோலா குரூப் 2016ல் 160 சீட்கள் திமுக பிடிக்கும் என்று சொன்ன நிலையில் மக்கள் 89 சீட்களே கொடுத்தார்கள். இந்நிலையில் தற்போதும் லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பு என்ற பெயரில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது என்றொரு கருத்துத் திணிப்பு வெளியாகி உள்ளது.
ஆன்லைன் வழியாக பரவும் தகவல்படி எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும், போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறதாம். நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயோலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.
மொத்தத்தில் வழக்கம் போ; திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும், அடுத்த பத்து நாட்கள் பிரச்சாரத்தில் இந்த வித்தியாசம் பெரிதாகலாம் எனவும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதான் இப்போது கொடுத்திருக்கும் கணிப்பு திணிப்பு
DMK-140-150
ADMK-35-40
PMK 06
BJP 02
NTK 02
MNM 02-04
AMMK 08-12
Congress 15-22
VCK 04
MDMK 05
Communists 08
Muslim parties 03
Other parties 05-08