இன்னாது 3 மாதத்தில் தேர்தலா? அதெல்லாம் முடியாது!- பாக். தேர்தல் ஆணையம் பதில்!

இன்னாது 3 மாதத்தில் தேர்தலா? அதெல்லாம் முடியாது!- பாக். தேர்தல் ஆணையம் பதில்!

ன்னாது 3 மாதத்தில் தேர்தல் நடத்தணுமா? அதெல்லாம் முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

பாகிஸ்தான் அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்தியாவின் வெளியுறவு கொள்கை அருமையாக உள்ளது, இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு உலக நாடுகளில் நல்ல மதிப்பு இருக்கிறது என்று வழக்கமான பாகிஸ்தான் பிரதமர்களுக்கு மாறாக இம்ரான் கான் பேசியிருந்தார்.

மேலும், பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவர அமெரிக்கா சதி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கிடையே அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருந்தன. அதன் மீதான வாக்கெடுப்பு கடந்த ஞாயிறன்று நடைபெறவிருந்த நிலையில், அதனை பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 5-யை பயன்படுத்தி இம்ரான் கான் நிராகரித்தார்.

மேலும் நாடாளுன்றத்தை கலைக்க வேண்டும் என்று அவர் செய்த பரிந்துரையை தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து பிரதமராக இம்ரான் கான்பொறுப்பில் உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட பின்னர் தொலைக்காட்சியில் மக்களிடம் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் எதிர்காலத்தை பாகிஸ்தான் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளிநாட்டவர் தீர்மானிக்க கூடாது. புதிய தேர்தலுக்கு தயாராகுங்கள். என்று கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தனது தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினரை தேர்தலுக்கு தயாராகும்படி உத்தரவிட்ட இம்ரான் கான் அதற்கான பணிகளை மேற்கொண்டார். மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு இருக்கும்போதே தேர்தலை நடத்தி மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது இம்ரான் கானின் திட்டமாக உள்ளது. இதற்கு முட்டுக் கட்டை போடும் நடவடிக்கையில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலை உடனடியாக நடத்துமாறு இம்ரான் கான் கோரியிருந்த நிலையில், 3 மாதங்களுக்குள் அதனை நடத்தி முடிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான பொருட்கள், வாக்குச் சீட்டுகள், அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுத்தல் உள்ளிட்டவற்றை உடனடியாக செய்ய முடியாது என்பதால், 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்த முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் விளக்கமாக உள்ளது.

error: Content is protected !!