March 22, 2023

தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ்., ஆபிசர்கள் ட்ரான்ஸ்ஃபர்!

தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இன்று ஒரே நேரத்தில் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த ட்ரான்ஸ்ஃபர்படி, எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்குள் மட்டும் ஒன்பது அதிகாரிகள் புதிதாக பணியமர்த்தப் பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் இரண்டு கூடுதல் ஆணையர்கள், நான்கு இணை ஆணையர்கள், இரண்டு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர்கள், ஒரு போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் என சென்னை காவல்துறை மொத்தமாகவே மாற்றமடைந்திருக்கிறது.

அந்த வகையில் ஐபிஎஸ் ஆபீசர்களின் ட்ரான்ஸ்பர் முழு விபரம் இதோ:

சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை மேற்கு மண்டல ஐ.ஜிஆக தினகரன் நியனம்

சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்

திருநெல்வேலி நகர காவல் ஆணையராக அன்பு நியமனம்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.,யாக மணிவண்ணன் நியமனம்

சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம்

சிபிசிஐடி ஐ.ஜி.,ஆக தேன்மொழி நியமனம்

காவல்துறை பொதுப்பிரிவு ஐ.ஜி.,யாக பெரியய்யா நியமனம்

போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பவானீஸ்வரி நியமனம்

சென்னை காவல் தலைமையக இணை ஆணையராக மகேஸ்வரி நியமனம்

சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையராக செந்தில் குமார்.

சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக லட்சுமி நியமனம்

சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராக ராஜேஸ்வரி நியமனம்

காவல்துறை நிர்வாக பிரிவு ஐ.ஜியாக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்மதுரை சரக டி.ஐ.ஜி.,யாக சுதாகர் மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூடவே அரியலூர் எஸ்.பி.,பாஸ்கரன்ராணிப்பேட்டை எஸ்.பி., சிவகுமார். நீலகிரி எஸ்.பி., பாண்டியராஜன்திருச்சிஎஸ்.பி., ராஜன்சிவகங்கை எஸ்.பி., ராஜராஜன்கரூர் எஸ்.பி.,யாக மகேஸ்வரன் உள்ளிட்ட 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.