புதிய வாக்காளர்கள் பதிவு செய்து கொள்ள ஃபேஸ் புக்-கில் சிறப்பு ஏற்பாடு!

புதிய வாக்காளர்கள் பதிவு செய்து கொள்ள ஃபேஸ் புக்-கில் சிறப்பு ஏற்பாடு!

எல்லாவிதமான டெக்னாலஜிகளுக்கும் தன்னை தயார் படுத்திக் கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர் சேர்க்கைக்காக ஃபேஸ்புக்- மூலம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. தற்போது சர்வதேச அளவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல ேகாடி இளைஞர்கள் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதை தன்னுடைய நடவடிக்கைக்கு பயன்படுத்திக் கொள்ள, தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, நாளை முதல் 18 வயது நிரம்பியவர்கள் பேஸ்புக் பக்கத்தை திறக்கும்போது, அவர்களுக்கு வாக்காளர் சேர்க்கையை பதிவு செய்யுமாறு விளம்பரம் தோன்றும்.‘

ரெஜிஸ்டர் நவ்’ பட்டனை, சம்பந்தப்பட்டவர்கள் கிளிக் செய்தால், நேராக புதிய வாக்காளர் சேர்க்கைக்கான பக்கத்துக்கு அவர்களுக்கு அழைத்து செல்லும். அங்கு புதிய வாக்காளர்கள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.நாடு முழுவதும் தமிழ், இந்தி, கன்னடம் மலையாளம் என்று 18 மொழிகளில் இந்த வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது.

Related Posts

error: Content is protected !!