• Latest
  • Trending
  • All
தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

2 years ago
பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது?

பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது?

17 hours ago
முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் கைது! – வீடியோ!

முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் கைது! – வீடியோ!

17 hours ago
அவமானம் – மோடி முன்னிலையில் ஆவேசமான மம்தா! – வீடியோ

அவமானம் – மோடி முன்னிலையில் ஆவேசமான மம்தா! – வீடியோ

17 hours ago
முன்னா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

முன்னா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

18 hours ago
நடராஜன்  உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா அறிவிப்பு!

நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா அறிவிப்பு!

19 hours ago
நீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’!

நீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’!

2 days ago
கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை!

கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை!

2 days ago
ஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு!

ஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு!

2 days ago
சேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை!- விடியோ!

சேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை!- விடியோ!

3 days ago
என்ன செய்யப்போகிறார் பைடன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

என்ன செய்யப்போகிறார் பைடன்? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

3 days ago
‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு!

‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு!

3 days ago
மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு!

மத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு!

3 days ago
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
Sunday, January 24, 2021
  • Login
AanthaiReporter.Com
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
No Result
View All Result
AanthaiReporter.Com
No Result
View All Result
Home Running News

தமிழகத்தில் நடைபெறும் ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

June 26, 2019
in Running News, தமிழகம்
0
502
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் காலியாகப் போகும்  ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நம் இந்திய பாராளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று மக்களவை, மற்றொன்று மாநிலங் களவை. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இதில் 12 நியமன உறுப்பினர்கள் ஆவர்.  தமிழகத்தில் இருந்து சுமார் 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படு கின்றனர்.  தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆகும். அதில் ஒருவர் நியமன உறுப்பினர் ஆவர். தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு சுமார் 34 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

இந்நிலையில் தமிழகம் சார்பாக தற்போது திமுகவிலிருந்து திருச்சி சிவா மற்றும் கனிமொழி, அதிமுகவில் இருந்து வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் மற்றும் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்களில் கனிமொழி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்.மீதமுள்ள ஐவரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியோடு முடிவடைகிறது.

அதையொட்டி தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்ற மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி நிறைவு பெறுவதாகவும், கனிமொழி மக்களவைக்கு தேர்வு பெற்றதால் அவரது இடம் காலியாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆறு இடங்களுக்குமான தேர்தலின் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் என்றும், ஜூலை 8-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

9-ஆம்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறக் கடைசி நாள் என்றும் 11 – ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்றும், போட்டி இருந்தால் ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய 34 எம்,எல்.ஏக் களின் ஆதரவு தேவை என்பதால், தற்போதுள்ள சூழ்நிலையில் திமுக மற்றும் அதிமுக இருவரும் தலா 3 எம்.பிக்களைத் தேர்வு செய்ய இயலும் என்று தெரிகிறது.  இதில் அதிமுக கட்சி மக்களவை தேர்தலின் போது கூட்டணி அமைத்த பாமகவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . அதன் படி தருமபுரி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி யடைந்த  பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ராஜ்ய சபா உறுப்பினர் ஆக அதிக வாய்ப்பு. மீதமுள்ள இரு ராஜ்யசபா சீட்டுகள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை அதிமுக கட்சி வழங்கி வந்தது. இந்த முறையும் அந்த கட்சிக்கு சீட் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  மீதமுள்ள ஒரு ராஜ்ய சபா பதவிக்கு அதிமுக வின் மூத்த தலைவர் மைத்ரேயனுக்கு வழங்கப்படலாம் என்றும் செய்தி பரவி வருகிறது!

திமுக சார்பில் கூட்டணி கட்சியான மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ-வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இரு ராஜ்ய சபா சீட்களில் திமுகவின் புது முகங்களுக்கு அக்கட்சி வாய்ப்பளிக்க முடிவாம் . அதே சமயம்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மாநிலங் களவை உறுப்பினரின் பதவி காலம் முடிவடையும் நிலையில் அவருக்காக திமுகவிடம் ஒரு ராஜ்ய சபா எம்பி சீட்டை  காங்கிரஸ் கட்சி கேட்க கூடும் என்ற தகவலும் உலா வருகிறது.

Share201Tweet126Share50

Latest

பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது?

பழைய சீரியஸ் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது?

January 23, 2021
முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் கைது! – வீடியோ!

முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த கும்பல் கைது! – வீடியோ!

January 23, 2021
அவமானம் – மோடி முன்னிலையில் ஆவேசமான மம்தா! – வீடியோ

அவமானம் – மோடி முன்னிலையில் ஆவேசமான மம்தா! – வீடியோ

January 23, 2021
முன்னா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

முன்னா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

January 23, 2021
நடராஜன்  உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா அறிவிப்பு!

நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார்: மஹிந்திரா அறிவிப்பு!

January 23, 2021
நீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’!

நீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’!

January 22, 2021
கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை!

கோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை!

January 22, 2021
ஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு!

ஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு!

January 22, 2021
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In