September 18, 2021

பார்லிமெண்ட் தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் கமிஷன்!

கடந்த 3 வருடங்களாக ஒரே இடத்தில் பணி புரியும் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை மிக் விரைவில் இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றம் மற்றும் 4 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் ஜூன் 3ம் தேதிக்குள் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டியதை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. ஆகையால் தேர்தலில் தோடர்புடைய அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்தால் வேறு இடத்திற்கு மாற்ற உத்தர விட்டு ள்ளது. அதே போல் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அதிகாரி களையும் மே 31ம் தேதிக்குள் 3 ஆண்டு பணி நிறைவடையும் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த உத்தரவு தேர்தல் பணியுடன் நேரடி தொடர்புள்ள மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஐஜி, உதவி ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு பொருந்தும் எனவும் தேர்தல் பணியுடன் நேரடி தொடர்பு இல்லாத மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொருந்தாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிலும் அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் முடித்து மார்ச் முதல் வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.