ஆரம்ப நாட்களில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திய ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்ட்ரா முதல்வரானார்!

ஆரம்ப நாட்களில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திய ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்ட்ரா முதல்வரானார்!

சிவசேனை கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக‌ பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத்ஷிண்டே மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அவர்களை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைத்ததையடுத்து, இன்று -வியாழக்கிழமை 7.30 மணியளவில் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பதவி எற்பு விழாவிற்கு தனது குடும்பத்தினருடன் வந்த ஏக்நாத்ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். விரைவில் அமைச்சர்களாக சிவசேனை, பாஜகவைச் சேர்ந்தவர்கள் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது

முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்த 24 மணி நேரத்திற்குள், ஏக்நாத்ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவில்லை.

இச்சூழலில் புது முதல்வர் இளம் வயதில் சதாரா மாவட்டத்திலிருந்து பிழைப்பு தேடி மும்பை வந்த ஏக்நாத் ஷிண்டே ஆரம்ப நாள்களில் ஆட்டோ ஓட்டினார். பின்னர் சிவசேனாவில் இணைத்துக்கொண்டு தானேயில் கட்சியை வளர்த்தார். 1997-ம் ஆண்டு முதன்முறையாக தானே மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே, அதன் பிறகு மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் திகே வழிகாட்டுதலில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டதோடு 2004-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்றத்துக்குச் சென்றார். தொடர்ச்சியாக 4 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்பது போன்ற செய்திகள் ட்ரெண்டிங் ஆகிறது.

ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க முதல்வராக்கி இருப்பதன் மூலம் சிவசேனாவை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகியிருப்பதால் ஒட்டுமொத்த சிவசேனாவையும் ஏக்நாத் ஷிண்டேவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர பா.ஜ.க உதவும் என்று தெரிகிறது. இதனால் சிவசேனாவை தக்கவைத்துக்கொள்ள உத்தவ் தாக்கரே கடுமையான சட்டப்போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கும் என்று சட்டவல்லுனர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்

error: Content is protected !!