September 18, 2021

ஈஃபிள் டவரைச் சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடிச் சுவர்!- பிரான்ஸ் பிளான்

பிரான்ஸ் நாட்டின் ‘இரும்புப் பெண்’ என அழைக்கப்படும் ‘ஈஃபிள் டவர்’, உலக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் மக்கள் இந்த வரலாற்று புகழ்பெற்ற ஈபிள் டவரை காணத் தவறுவதில்லை. வருடத்துக்கு மினிமம், 70 லட்சம் மக்கள் ஈஃபிள் டவருக்கு வந்து செல்வதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.இப்படி புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடியால் ஆன சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த கண்ணாடி சுவர் அமைக்க 300 மில்லியன் யூரோ செலவு கணக்கிடப்பட்டுள்ளது. 128 வருட பழைமையான ஈஃபிள் டவரை புதுப்பிக்கும் வகையில் இந்த கண்ணாடி சுவர் மாதிரியை அமைக்க உள்ளதாக ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதற்கான பணிகள் தற்போது தொடங்க உள்ளது.

e towerr feb 11

இந்த ஈஃபில் கோபுரம்(Eiffel Tower) 7 உலக அதிசயங்களில் ஒன்றாகும்.பொறியியலாளர் குஸ்ரவ் ஈஃபில் (Gustave Eiffel) என்பவரால் 1887 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1889 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.சுமார் 300 மீட்டர் உயரமுடைய இந்த கோபுரத்தை 300 வேலையாட்கள் 18000 இற்கு மேற்பட்ட உருக்கு கம்பிகளை ஒட்டியதன் மூலம் உருவாக்கினார்கள். ( கோபுர கட்டு மானத்தின் போது ஒரு தொழிலாளி இறந்தார். ஆனால் இது ஏனைய கட்டுமான அமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த இறப்பாகும்.) 7300 டன் நிறைக்கு அதிகமான நிறைகொண்ட இந்த கோபுரம் கடும் வெப்பத்தின் போது ஏற்படும் உலோக விரிவினால் கணிசமான சென்டிமீட்டர்கள் உயர அதிகரிப்பை காட்டுகின்றது. ( 6-9 சென்டிமீட்டர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. )

ஈஃபில் இந்த கோபுரத்தை கட்டும் போது மக்களிடையே இது அசிங்கமானது தேவையற்ற செயல் என நிராகரிக்கப்பட்டது. எனினும் இன்று உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் விரும்பிச்சென்று பார்வையிடும் முதல் தர இடமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் 20 ஆண்டுகாலம் மட்டுமே இருக்கும்.. அதன் பிறகு அகற்றி விடலாம் என்றுதான் சொல்லி இக் கோபுரத்தை அமைத்தார்கள். பின்னர், வரவேற்பை கருத்திற்கொண்டு நிரந்தரச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

3 அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரத்தில் முதல் இரண்டு அடுக்குகளிலும் உணவகங்கள் இருக்கின்றன.முதல் இரண்டு அடுக்குகளுக்கும் லிப்ட் மூலமாகவோ (இது மேலும் கீழும் பயணம் செய்யும் தூரம் ஒரு ஆண்டில் 1,03,000 கிலோ மீட்டர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.)அல்லது படிகளின் மூலமாகவோ ஏறலாம். ஆனால் 3 ஆவது அடுக்கிற்கு மின் தூக்கியாம் மட்டுமே ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.3 ஆவது அடுக்கில் உலக நாடுகளின் கொடிகளும் ஈஃபில் கோபுரத்தில் இருந்து நாடுகள் இருக்கும் திசைகளும் தூரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன! உச்சியில் இருந்து பார்த்தால் சுமார் 72 கிலோமீட்டர் அளாவிற்கு பரிஸின் அழகை ரசிக்க முடியும்.

url
.
ஈபிள் டவர் நிர்மாணிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை அதற்கு 18 முறை வண்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது.

ஈபிள் டவர் உருவாக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து 41 வருடங்களாக ‘உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம்’ என்ற பெயருடன் விளங்கியது.

1889–ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 27 கோடி மக்கள் ஈபிள் டவரை நேரடியாகப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1944–ம் ஆண்டில், ஈபிள் டவரை தகர்க்குமாறு பிரான்ஸ் கவர்னருக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார்.

பலமாக காற்று வீசும்போது ஈபிள் டவரின் உச்சிப்பகுதி சுமார் 6 முதல் 7 மீட்டர்கள் வரை முன்னும் பின்னும் நகர்கிறது.

இந்நிலையில் ஈஃபிள் கோபுரத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் எந்தபகுதியில் இருந்து வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியும். இந்த கண்ணாடியால் ஆன மதிலை எழுப்புவதன் மூலம் குறிப்பிட்ட வழியாக மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுவர் எழுப்புவதன் மூலம் நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும். மேலும் ஈஃபிள் கோபுரம் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.