October 18, 2021

ஆன்லைன் தொடர்ப்பை கட்டுப்படுத்தும் புதிய சட்டம்! – எகிப்து நாட்டில் அமல்!

உலக அளவில்  இணைய தளம் மூலம் அதிக அளவில் தகவல் திருடப்படும் நாடுகள் பட்டி யலில் கனடா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து  உள்ளன. இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில் பிரேசிலும். நெதர்லாந்து, கொலம்பியா, ஸ்பெயின், மெக்ஸி கோ, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இணைய தளம் மூலம் தகவல்களைத் திருடுவது மட்டுமின்றி, வைரஸ்களை பரப்புவது, இணைய தளம் மூலம் நிதி மோசடி ஆகியவை இந்நாடுகளில் அதிக அளவில் நடை பெற்றுள்ளன.அதுவும் முன் பெல்லாம், கணினி மூலம் நிதி மோசடிகள் அதிகம் நடைபெற்றன. ஆனால், திறன் மிகு செல் பேசிகள் பயன்பாடு அதிகரித்த பிறகு, இணையதள குற்றவாளிகள் அவற்றின் மூலம் முறைகேடு களை அதிகம் நடத்தி வருகின்றனர். செல்லிடப்பேசி இணைய வழி முறைகேடுகளில் 65 சதவீதம் செயலிகள் (ஆப்) மூலமும் உலவிகள் (பிரௌசர்) மூலமும்தான் நடைபெறுகின்றன.

இந்நிலையில் எகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஒரு புதிய சட்டம் ஒன்றில் அந்நாட்டு பிரதமர் அப்டெல் ஃபட்டா அல்- சிசி கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து சைபர்கிரைம் (இணைய வழி குற்றம்) எனும் அச்சட்டத்தின் படி தேச பாதுகாப்பு அல்லது பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான வலைதளங்கள் அந்நாட்டில் யாரும் அணுகமுடியாவாறு முடக்கப்படும். இது போன்ற வலைதளங்களை யாராவது நடத்தி வந்தாலும் அல்லது அப்பக்கங்களில் உதவினா லும் அவர் சிறை தண்டனை அல்லது அபராதம் கட்ட வேண்டிய நிலையை சந்திக்க வேண்டியது இருக்கும்.

இப்புதிய நடவடிக்கைகள் நாட்டின் நிலையற்றத்தன்மை மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள உதவும் என்கிறார்கள். ஆனால் மனித உரிமைகள் குழுக்கள், அரசு அந்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் எதிரிகளையும் நசுக்கவே இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து  உள்ளன.

ஆனாலும் கெய்ரோவை தலைமையகமாக கொண்ட கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்பாடுக்கான அமைப்பு, எகிப்தில் இப்புதியச் சட்டம் கையெழுத்தாவதற்கு முன்னதாகவே 500 வலைதளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன என்கிறது.கடந்த மாதம் எகிப்து நாடாளுமன்றத்தில் மற்றொரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு இன்னமும் அதிபர் கையெழுத்திட வில்லை. அம் மசோதாவின்படி சமூக வலைதளங்களில் 5000 பின்தொடர்பாளர்கள் (ஃபாலோயர்கள்) கொண்டி ருக்கும் எந்தவொரு நபரின் சம்பந்தப்பட்ட சமூகவலைதள பக்கத்தையும், கணக்கையும் அரசு கண்காணிப்புக்குள்ளாக்கலாம்.

இச்சட்டம் குறித்தது செய்தியாளர்கள் கூறுகையில், எகிப்தில் வீதியில் இறங்கி போராட்டம் செய் வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இணையம்தான் எகிப்தியர்களுக்கு தங்களின் கருத்து வேறுபாடையும் எதிர்ப்பையும் பதிவு செய்ய உதவும் ஒரே களமாக இருந்தது.அமைதியான முறை யில் விமர்சனங்களை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்கள், சமுக செயற்பாட்டாளர்கள், விமர் சகர்களை அநீதியான முறையில் கைது செய்ய எகிப்திய அதிகாரிகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை , அவசர நிலை சட்டம் மற்றும் நீதிமன்றங்களை பயன்படுத்துவதாக கூறி கடந்த மாதம் மனித உரிமை கண்காணிப்பகம் ஓர் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.

முன்னதாக மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான எகிப்திய கமிஷன் துறை தலைவரின் மனைவி உள்பட பல செயற்பாட்டாளர்கள், நன்கு அறியப்பட்ட வலைப்பதிவரான வேல் அப்பாஸ் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.