போலீஸ்-னா பொறுக்கி இல்லே.. காவலர்-னு நிரூபிக்க வேண்டிய நேரமிது!

போலீஸ்-னா பொறுக்கி இல்லே.. காவலர்-னு நிரூபிக்க வேண்டிய நேரமிது!

சாத்தான்குளம் போலீசாவது ஸ்டேஷனுக்கு வரவச்சு அடிச்சாங்க. ஏத்தாப்பூர்ல பட்டப்பகல்ல பப்ளிக் ரோட்ல பெரியசாமிய அடிச்சு கொன்னுருக்கார் சப்பின்ஸ் பெரியசாமி. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் கொல வெறி இருக்கணும். அல்லது குடும்ப பிரச்னையால மூள கலங்கின கேசா இருக்கணும். பெரியசாமி பிரச்னை என்னானு ஆழமா விசாரிச்சா அரசுக்கு நல்ல துப்பு கிடைக்கும். அது வழியா போலீஸ் நோய்களுக்கு மருந்து கிடைக்கலாம்.

சப்பின்ஸ் அரெஸ்டோட நிறுத்திட்டாங்க. இது சரியா தெரியல. ஏட்டு முருகன், கான்ஸ்டபிள்ஸ் திவாகர், பாலாஜி..னு 3 பேர் கூட இருந்தாங்க. அய்யோ சார் அடிக்காதீங்க அடிக்காதீங்க..னு முருகேசன் கதறும்போது பெரியசாமிய 3 பேரும் தடுக்கல. போதும் விட்ருங்க, குடிச்சிருக்கான்; செத்துகித்து போய்ட்டா பிரச்னை பெருசாயிரும்..னு சொல்லக்கூட தில்லு இல்ல. இது கொலைக்கு உடந்தை இல்லையா?

முருகேசன் துடிக்கிறதயும் பெரியசாமி அடிக்கிறதயும் சுத்திச் சுத்தி வந்து செல்போன்ல விடியோ எடுத்திருக்காங்க இந்த காக்கிச் சட்டை கொடூரனுங்க. வாட்சப்ல பாக்கும்போது ரத்தம் கொதிக்குது.

நிச்சயமா இது நார்மலா இருக்ற யாரும் செய்யக்கூடிய வேல இல்ல. Something is terribly wrong with our policemen. காவலர், காவல் துறை மாதிரியான வார்த்தைகள் மொத்தமா அர்த்தம் அழிஞ்சு போச்சு. சாத்தான்குளம் சம்பவத்துக்கு நாடே கொந்தளிச்சப்ப அதுக்கான பலன் இருக்கும்னு எதிர்பாத்தோம். ஒரு எபக்டும் இல்ல. அந்த கேஸ்ல விசாரணையே மூவ் ஆகலை. போலீஸ் சம்பந்தப்பட்ட மேட்டர், அதனால வழக்கம்போல ஊத்தி மூடிருவாங்க..னு ஜனங்க 101% நம்புறாங்க.

சட்டத்த மதிக்காம தப்பு செய்ற போலீஸ்காரங்க எண்ணிக்கைல கம்மியா இருந்தாலும் கேன்சர் மாதிரி. விட்டு வச்சா மொத்த போலீசையும் அரிச்சிரும். அதோட சமூகமும் சிதைஞ்சு போகும். அப்புறம் அரசாங்கம் இருந்தாலும் இல்லைனாலும் ஒண்ணுதான்.

சீயெம் ஸ்டாலின் இந்த சம்பவத்த ஒரு wake-up call மாதிரி எடுத்துகிட்டு, அம்பது வருசமா பரண்ல கிடக்குற போலீஸ் சீர்திருத்த யோசனைகள தூசிதட்டி எடுத்து செயல்படுத்தினா அடுத்த தலைமுறைகள் அவர காவல் தெய்வமா கும்புடும்.

ஆனா, அதுக்கு அசாத்திய துணிச்சல் வேணும்.

கதிர்

error: Content is protected !!