எடப்பாடி பழனிச்சாமி : போட்டியின்றி பொதுச்செயலாளர்?

எடப்பாடி பழனிச்சாமி : போட்டியின்றி பொதுச்செயலாளர்?

டுத்தடுத்த களேபரங்களுக்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அவர் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு இந்த மாதம் 26 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்காக போட்டியிட தகுதி உள்ளவர்களிடமிருந்து நேற்றும் இன்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு பெறப்படுவது முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்காக மொத்தம் 222 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு மனு எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தது. மற்ற 221 மனுக்களும் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் மற்றவர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் பொதுச் செயலாளராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும்வரை, இந்த தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இதை அதிகாரப்பூர்வமாக அக்கட்சியால் அறிவிக்க முடியாது. ஆனாலும் கட்சி சட்ட திட்டப்படி முறைப்படி தேர்தல் அறிவித்து தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக இன்று  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!