November 28, 2021

ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்ய எளிதான வழிகள்!

யற்கையாகவே, நம்மை அறியாமல் தன்னிச்சையாக சுவாசித்தல் என்றொரு செயல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை. சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது. மனிதரின் மார்பில் உள்ள இரண்டு நுரையீரல்களிலும் கண்ணுக்குத் தெரியாத அளவில் மிக மிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப் பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியில் இருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.

மனிதன் ஆக்சிஜன் வாயுவை சுவாசித்து, கார்பன்-டை ஆக்ஸைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்சிஜன் வாயுவை வெளியே விடுகிறது. ரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை. இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக்கொள்கிறார். 2.75 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500. இதைக் கொண்டு கணக்கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம். மரங்கள் தரும் சேவைகளை மதிப்பிட்ட ஆராய்ச்சிகளை ஒப்பு நோக்கும்போது 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி என்கிறார்கள்

எது எப்படியோ உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளில் இருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்கு தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும். காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம்.

ஆக.. இந்த சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். காற்றில் கலந்திருக்கும் `பிராண வாயு‘ என்ற `ஆக்சிஜன்‘ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத காற்றில், ஆக்சிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாக கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்சிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான் உள்ளது. மேலும் கார்பன்-டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன்-டை ஆக்ஸைடு, ஓசோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் 16 விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.

காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்சிஜன் வாயுதான், நம்மை உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்சிஜனில் 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் அனைத்து உயிருக்கும் ஆபத்துதான். இந்த 21 சதவீத ஆக்சிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான். நமது எல்லா செயல்களுக்கும் ஆற்றலானது தேவைப்படுகிறது.

நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு ஆக்சிஜனானது தேவைப்படுகிறது. அதாவது, ஆக்சிஜன் உணவுடன் வினைபட்டு, உணவினை ஆற்றலாக மாற்றுகிறது. எனவேதான், நாம் ஆக்சிஜனை மட்டும் சுவாசிக்கிறோம். சுமார் 80% ஆற்றலை, ஆக்சிஜனின் மூலமாகவே நாம் பெறுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்படின்னா, நீரில் வாழும் மீன் உள்ளிட்ட விலங்கினங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுமே! இது எப்படி சாத்தியம்? ஆக்சிஜன் நீரில் கரையுமா?ன்னு கேள்வி எழலாம். இதற்கு பதில் ஆம், ஆக்சிஜன் நீரில் கரையும். பொதுவாக, எல்லா வாயுக்களும் நீரில் கரையாது. அம்மோனியா போன்ற ஒரு சில வாயுக்கள் மட்டுமே நீரில் நன்கு கரையும் தன்மை பெற்றவை.

ஆக்சிஜனானது மிககுறைந்த அளவே நீரில் கரையும் தன்மையை பெற்றிருக்கிறது. எந்த அளவுக்கு என்றால், நீர்வாழ் விலங்கினங்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற அளவு!. இயற்கை எல்லாவற்றையும் கச்சிதமாக அமைத்திருப்பதற்கு இதுவும் ஒருசான்று.

இந்நிலையில் முன்னரே சொன்னது போல் இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மரங்கள் ஏராளமாக உள்ளன. இது போன்ற மரங்களுக்கு இணையாக ஆக்ஸிஜனைத் தரும் செடிகொடிகள் என  பல வகைகள் உள்ளன. எல்லா சீதோஷ்ண நிலையிலும் வாழும் இந்தச் செடிகளை இயற்கை தந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் எனக் கூறலாம். நமது பெட்ரூம், சமையலறை, பால்கனி என்று எங்கு வேண்டுமானாலும் இவற்றை வளர்க்கலாம்.

அதிலும் பாம்பு செடி, துளசி செடி இவைகள் இரவிலும் ஆக்சிஜனை வெளியிடும் தாவரங்களாகும். கற்றாழை, புங்கை, வேம்பு, அரச மரம், மூங்கில் இவை அனைத்தும் ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் தாவரங்களாகும். அதிலும் ஒரு மூங்கில் கொத்து ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை விட அதிககமாக உற்பத்தி செய்கிறது. எனவே பெரிய அளவில் மரங்களை நாட்டுக்காக நட்டு வளர்க்க வில்லையென்றாலும், நமது வீட்டுக்காகவாவது மேற்கண்ட தாவரங்களை Oxygen Plants வளர்த்து நம்மை சுற்றியுள்ள சிறு பகுதியையாவது தூய சூழலில் பாதுகாப்போம்.

மேலும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தாவரங்கள்:

1.முளைகள்:

நீங்கள் உணவிற்காக முளைகளை வீட்டில் வளர்கிறீர்களா? அதாவது (பட்டாணி முளைகள், buckwheat முளைகள் மற்றும் சூரியகாந்தி முளைகள் ). இந்த முளைகள் நீங்கள் வாழ்கின்ற இடத்தில் ஒரு அற்புதமான மினி கிரீன்ஹவுஸ் விளைவை ஏற்படுத்தும். நீங்கள் இந்த முளைகளை சாப்பிடுவதன் மூலம் தேவையான ஆக்சிஜன் வாய்வழியாக நமக்குள் செல்கிறது.

2.பாம்பு தாவரம்:

இந்த தாவரம் அனைத்து வழிகளிலும் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. இந்த தாவரம் இரவில் நிறைய CO2 (carbon dioxide) to O2 (oxygen) ஆக மாற்றுகிறது. இந்த பாம்பு தாவரம் காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடு நீக்குகிறது.

3.பாக்கு மரம்:

இந்த பாக்கு மரம் காற்றில் இருந்து சைலீன் மற்றும் டொலுவீனை அகற்றுகிறது. பகல் நேரத்தின் போது இந்த மரம் CO2 (carbon dioxide) to O2 (oxygen) மாற்றுகிறது.

4. கற்றாழை (AloeVera)

மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, கிராமங்களில்அனைத்து வீடுகளிலும் நிச்சயம் இருக்கும். காடு, மேடு என எங்கும் பார்க்கலாம் ஆனால் நகரங்களில் கட்டாயம் தேவை. ‘ஸ்னேக் பிளான்ட்’காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வழங்குகிறது என்றால், கற்றாழை ஃபார்மால்டிஹைடை முழுதாகக் கிரகித்துக் கொள்ளும். மற்றும் முடி உதிர்தல், தீப்புண் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படும்

5. சக்குலென்ட்ஸ் (Succulents)

பேச்சலர்கள் படுக்கை அறையில் வைக்க சிறந்த செடி சக்குலென்ட்ஸ். சிறிய அளவிலான தூசி, சிகரெட் புகை போன்றவற்றை முடிந்தளவு கிரகித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. அதே போல இதை பராமரிப்பது சுலபம். கற்றாழை போல அனைத்து சூழலிலும் வளரக்கூடியது. காற்றில் இருந்தே தனக்கான நீரை எடுத்துக்கொள்ளும்.