கிழக்கு இந்திய ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி!
இந்தியாவின் தரை வழிப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வேயின் கிழக்கு இந்திய ரயில்வே மண்டலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனங்கள் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 21 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
காலியிட பிரிவுகள்: அக்வாடிக், கூடைப்பந்து, சைக்கிளிங், கபடி, வாலிபால், வில்வித்தை, பாட்மிண்டன், கிரிக்கெட், பவர் லிப்டிங், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது : 2018 அக்., 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சில பிரிவுகளுக்கு பிளஸ் 2வும், இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : கல்வித் தகுதி மற்றும் விளையாட்டுத் தகுதி அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ. 500.
Chairman, Railway Recruitment Cell, Eastern Railway, 56, C.R.Avenue, RITES Building, 1st Floor, Kolkata – 700 012
கடைசி நாள் : 2018 நவ., 26.
விபரங்களுக்கு: http://139.99.53.236:8080/rrcer/Notification_Sports_Quota.PDF