September 29, 2021

ஆண்டுக்கு ஆண்டு ஆசியாவில் அதிகரிச்சி வரும் எலெக்ட்ரானிக் வேஸ்ட்

சர்வதேச அளவில்எலெக்ட்ரானிக் வேஸ்ட் (இ-வேஸ்ட்) விஷயத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.7 மில்லியன் எலெக்ட்ரானிக் மற்றும் எலெக்ட்ரிக்கல் கழிவு உருவாகிறது. இந்தத் தகவலை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதாவது உபயோகப்படுத்தப்படாமல் தூக்கி எறியப்படும்போது மின் பொருட்கள் உருவாக்கும் குப்பைகள்தான் e waste எனப்படும் மின்னணு கழிவுகள்.

e waste  jan 16

நம் நாட்டில் இது போன்ற மின்னணுக்களால் உருவாகும் குப்பைகள் மட்டும் உத்தேசமாக 25 லட்சம் டன்னாம். மேலும் இது வருடா வருடம் 4 அல்லது 5% அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.இதன் தொடர்ச்சியாக, நம் நாட்டில் சுமார் 148 பதிவு செய்யப்பட்ட மின் கழிவு மறு சுழற்சி அலகுகள் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்து கையாளக்கூடிய மின் கழிவுகளின் அளவு 4.55 லட்சம் டன் மட்டுமே. மீதி..? முக்கால்வாசி கடலிலோ, ஆற்றிலோ , வடிகால்களிலோ அல்லது திடக்கழிவுக் குப்பைகளுடன் சேர்த்தோ சப்பப்பட்டுவிடுகின்றன. இதனால் நீர் நிலை மற்றும் மண் வளம் மாசுபடுத்தப்பட்டுவிடுகிறது. இந்த மின்சுழற்சி அலகுகளும் கூட, தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள கழிவுகளை இப்படித்தான் வீசி எறிகின்றன.ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், கைபேசி என நாம் வாங்கும் பொருட்கள் எல்லாம், இப்படி தூக்கி எறியப்படும்போது நூறில் இருபது பங்கு மட்டுமே மறு சுழற்சிக்கு ஏற்றவையாகின்றன. மீதம் உள்ள எண்பது பர்சன்ட் கழிவுகள், நம் வளத்தைக்குறைக்கும் மின் கழிவே.

இது தவிர இந்தியாவில் இன்னொரு பிரச்னையும் உள்ளது. பல நாடுகள், சீனா உட்பட, தத்தம் மின் கழிவுகளை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுகின்றன. அவறைக் குறைந்த விலைக்கு நாம் வாங்கி நம் நாட்டை குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இதனிடையே ஆசிய நாடுகளில் இ-வேஸ்ட்டின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்தின் 12 நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 63 சதவிகிதம் அளவுக்கு இ-வேஸ்ட் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.

இதில், சீனாவின் இ-வேஸ்ட் அளவு 2010-லிருந்து 2015 வரையான காலக்கட்டத்தில் இரு மடங்குக்கு மேலே அதிகரித்துவிட்டது. அதிகபட்சமாக, ஹாங்காங்கில் ஒரு தனிநபர் ஆண்டுக்கு 21.7 கிலோ அளவுக்கு இ-வேஸ்ட் குப்பைக்கு காரணமாக இருக்கிறார் என இந்த அறிக்கை தகவல் கூறுகிறது

உலக அளவில் இ-வேஸ்ட்களை நிர்வகிக்க பல வளர்ந்து நாடுகளில் கட்டுமானங்கள் இருக்கிறது. இருப்பினும், கிட்டத்தட்ட 90 சதவிகித இ-வேஸ்ட் பொருட்கள் சட்டவிரோதமாகவே கொட்டப்படுகிறது.இந்நிலையில், இ-வேஸ்ட்களை நிர்வகிப்பதற்கு வளர்ந்த நாடுகளில் இருக்கும் கட்டுமானங்களை போன்று, ஆசியாவில் உள்ள பெரும்பான்மை நாடுகளில் கட்டுமானங்கள் இருப்பதில்லை. ஆதலால், ஆசிய நாடுகளில் இ-வேஸ்ட் அதிகரிப்பு மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.