May 17, 2021

பயணிகளைச் சுமந்துசெல்லும் பறக்கும் TAXI களை துபாய் அறிமுகம்! – வீடியோ

உலகின் நவீன சுற்றுலா நகரமான துபாயில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் அந்நாடு பறக்கும் போக்குவரத்து டாக்சிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பறக்கும் டாக்சிக்களில் விமானி இல்லை. முற்றிலும் பேட்டரிகளில் இயங்குகிறது. கணினி மூலம் தரைக்கட்டுப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. புறப்படும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்தத் தெரிவு செய்து தொடுதிரையில் பதிவு செய்தவுடன் நம்மை பத்திரமாக நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு; கொண்டு போய்ச் சேர்த்துவிடுமாம். இரண்டு மணிநேரம் மின்சாரம் ஏற்றினால் (சார்ஸ் செய்தால்) சுமார் அரைமணி நேரம் பயணிக்க முடியுமாம்.

dubai apr 20

சீனத்தயாரிப்பான இந்த பயணிகள் டிரோம்கள் மணிக்கு 100கி.மீ வேகத்தில் பறக்கும் ஆற்றல் படைத்தவை. தரையில் இருந்து 300மீ உயரத்தில் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்தது. அதிக வெப்பநிலை உள்ளிட்ட எத்தகைய காலநிலையிலும் செயல்படும் வகையில் இந்த டிரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பம்சாகும்.

இதுவரை காணொளிகள் எடுப்பதற்குப் பயன்பட்டு வந்த டிரோன்கள் இனி பயணிகளையும் சுமந்து செல்லப்போகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து இபொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரப்போகிறது. என்ன துபாய்க்கு இப்பொழுதே டிக்கெட் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டீர்களா?