உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர ஓட்டல்! – துபாயில் திறக்கப்பட்டுள்ளது.

Vegas of the Middle East எனப்படும் துபாயிலுள்ள 54 மாடிகள் கொண்ட உலகின் உயரமான உயரமான இடத்தில் அமைந்துள்ள ஓட்டலாகப்பட்டது தங்களை உலகின் முதன் முதல் மற்றும் ஒரே 7 நட்சத்திர ஓட்டல் எனக் கூறிக் வந்தார்கள்.இது ரொம்ப காஸ்ட்லி. ஒரு நாள் மினிமம் வாடகை 70000 ரூபாய்க்கும் மேல் என்றால் பாருங்கள். தங்கள் விருந்தினர்களை கூட்டிவர BMW,Rolls Royce கார்கள் மற்றும் கெலிகாப்டர்களையே பயன்படுத்துகிறார்கள்.இதற்காக உயரத்தில் ஒரு கெலிபேட் -Helipad -கெலிகாப்டர் இறங்கும் தளம் அமைத்திருக்கிறார்கள். இந்நிலையில் துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் அதை விட மிக உயரமான சொகுசு நட்சத்திர ஓட்டல் கடந்த 2008-ம் ஆண்டு கட்டப்பட்டு வந்த இந்த புதிய ஓட்டல் இன்று திறக்கப்பட்டது.

 

இந்த ஓட்டல் 75 மாடிகளை கொண்டது. 528 விருந்தினர்கள் அறைகளும், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், 4 ரெஸ்டாரண்ட்கள், திறந்தவெளி நீச்சல்குளம், சொகுசு குளியல் அறை, மசாஜ் அறை, தண்ணீரை பீய்ச்சி மசாஜ் செய்யும் ஜக்குஜி உள்ளிட்ட வசதிகள் இந்த ஹோட்டலில் இடம் பெற்றுள்ளது.

ஜவோரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டலுக்கு தங்க நிற கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓட்டல் 356 மீட்டர்(1,168 அடி) உயரம் கொண்டது. ஏறக்குறைய கால் மைல் தொலைவு உயரம் கொண்டதாகும். 2020ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் நாடு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!