December 2, 2021

துபாயில் தனிக் கவனம் பெற்ற ‘தாஜ்மஹால்’!

உலகளவில் மிக வேகமான வளர்ச்சியை கொண்ட நகரங்களில் ஒன்றாக கருதப்படும் துபாய். சுற்றுலா பயணிகளை கவரும் ஆடம்பர நகரமாகவும் தனிக் கவனம் பெற்று வருகிறது. வானாவிய சில அழகிய கட்டிடங்கள், பூங்காக்கள், பொழுபோக்கு தளங்கள் என சுற்றுலா பயணிகளை கவர பல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட துபாய் ஐக்கிய அரேபிய எமிரேட் நாட்டின் மிக பிரபலமான நகரமாகும். அத்துடன் துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.
சர்வதேச அளவில் அதிகமான  மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடை பெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த அக்.30ல் தொடங்கியது. இக்கண்காட்சியானது வரும் ஏப்ரல் 13ம் தேதி வரை   நடைபெறு கிறது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஆசியா ,ஐரோப்பிய, அரபு நாடுகள் என 78 நாடுகளின்  கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரம்மாண்ட அரங்கங்கள் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஒரே இடத்தில் எல்லா நாடுகளின் உணவு பழக்க வழக்கங்கள், புகழ்பெற்ற ஆடைகள், வாசனை திரவியங்கள் மற்றும் எண்ணிலடங்கா பொருட்கள் பற்றி அறிந்து கொள்ளவும் வாங்கவும் இயலும்.
மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால் மாதிரி வடிவம் அமைக்கப் பட்டு சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உயரமான துபாய் புர்ஜ் கலீபா மாதிரி கட்டிடம் மற்றும் பல்வேறு மாதிரி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை களுக்கான நுற்றுக்கணக்கான விளையாட்டு சாதனங்கள், வீடியோ கேம்ஸ்கள் நிறுவப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் 50 லட்சத்திற்கும் மேல் மக்கள்  பங்கேற்கின்றனர். பயணிகளை ஈர்க்கும் வகையில்  பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகிறது. 3500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.  செயற்கை தண்ணீர் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் படகில் காய்கறிகள் மற்றும் பழ வகைகளும் விற்கப்படுகிறது.